How to know the cibil score online tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பதிவு தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது அதாவது சிபில் ஸ்கோர் என்பது ஒருவருடைய கடன் தகுதி அளவீடாகும்.
இதனுடைய மதிப்பெண் 300 முதல் 900 வரை இருக்கும், 900 அதிகபட்சம் கடன் தகுதியைக் குறிக்கிறது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த ஒப்பந்தங்களைப் பெற திக மதிப்பெண் உங்களுக்கு உதவும், பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாதவற்றுக்கு, கடன் ஒப்புதலுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் 685 அல்லது அதற்கும் அதிகமாகும்.
இருப்பினும் உங்கள் சிபில் ஸ்கோர் மதிப்பெண்ணைப் பற்றி அதிந்து கொள்வதற்கு முன் சிபில் ஸ்கோர் மதிப்பெண் ஏன் முக்கியத்துவமானது? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிபில் ஸ்கோர் மதிப்பெண் ஏன் முக்கியத்துவமானது?
கிரெடிட் ஹெல்த் ரிப்போர்ட் ஆவணம் மற்றும் தொடர்புடைய கிரெடிட் ஸ்கோர், பொதுவாக CIPIL ஸ்கோர் என குறிப்பிடப்படுகிறது, உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்கிறது மற்றும் உங்கள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கடனளிப்பவரிடம் தெரிவிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான குறைந்த வாய்ப்பைக் குறிக்கிறது. அதே சமயம் குறைந்த மதிப்பெண் கடன் ஆபத்தான நடத்தையைக் குறிக்கிறது.
CIBIL என்பது கடன் தகவல் களஞ்சியமாக இருக்கும் போது, அது எந்த கடன் வழங்கும் நடவடிக்கையிலும் பங்கேற்காது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், வங்கிகள் மற்றும் கடன் வழங்குநர்கள் விண்ணப்பதாரரின் கடன் விவரங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தும் முக்கியமான தகவலை இது வழங்குகிறது மற்றும் கடன் வழங்குவதில் மிகவும் நண்பகமான வரலாற்றைக் கொண்ட வாடிக்கையாளர்களை அடையாளமாக காணலாம். சுருக்கமாக சில வேண்டும் என்றால் ஒருவருடைய நண்பகத்தன்மையை அறிவதற்காக தான் இந்த சிபில் ஸ்கோர் பார்க்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்
சரி சிபில் ஸ்கோர்-ஐ ஆன்லைனில் மிக எளிதாக தெரிந்துகொள்ளாம் வாங்க.
முதலில் https://homeloans.sbi/ என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Get free CIBIL Score என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மற்றொரு பேஜை திறக்கவும். அவற்றில் Personal Details என்பதில் உங்கள் பெயர், Date of Birth, Gender போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
அதன் பிறகு Address Details-யில் Address Type என்பதில் Permanent Address, Residence Address, Office Address & Other என்று சில ஆப்ஷன்கள் இருக்கும் அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள். அதனை தொடர்ந்து State, City, Pincode போன்ற விவரங்களை நிரப்பவும்.
அதன் பிறகு Identity Details என்பதில் Use PAN என்பதில் Yes or No என்ற ஆப்சன் இருக்கும். அவற்றில் நீங்கள் PAN கார்டு எண்ணினை உள்ளிட்ட வேண்டும் என்று விருப்புகிறீர்கள் என்றால் Yes என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், இல்லை வேண்டாம் என்றால் No என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
Contact Details என்பதில் உங்கள் மொபைல் எண், மெயில் ஐடி ஆகிய விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
பின் Terms and Conditions-ஐ டிக் செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
Submit என்பதை கிளிக் செய்த பிறகு Verify Your Mobile Number ஒரு பாபப் வரும் அவற்றில் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அந்த OTP எண்ணை உள்ளீடு மீண்டும் Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் காட்டப்படும் அதனை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டவுன்லோடு ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மொபைலில் உள்ள Gpay-வில் சிபில் ஸ்கோரை Check செய்வது எப்படி தெரியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |