How to Link Aadhaar With Bank Account Online in Tamil
நாம் அனைவரிடமும் பணம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வங்கியில் பேங்க் அக்கவுண்ட் இருக்கும். அப்படி பார்த்தால் பேங்க் அக்கவுண்ட் என்பது எல்லாருக்குமே மிகவும் முக்கியமான ஒன்று தான். அதிலும் ஒரு சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்து இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருப்பது விட மிகவும் முக்கியமானது நமக்கான விதிமுறைகள் பற்றி எல்லாம் தெரிந்து வைத்து இருப்பது தான்.
ஏனென்றால் நாம் வெறும் பேங்க் அக்கவுண்ட்டை மட்டும் வைத்து விட்டு எந்த ஒரு முக்கியமான இணைப்பினையும் செய்யாமல் இருந்தோம் என்றால் அதில் எந்த புரோஜனும் கிடையாது. அந்த வகையில் பேங்க் பாஸ்புக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் என இவற்றை எல்லாம் கட்டாயமாக இணைத்து இருக்க வேண்டும். இதன் படி பார்த்தால் நம்மில் பலருக்கு இதனை எப்படி ஆன்லைன் மூலம் இணைப்பது என்று தெரியாமல் இருக்கும் காரணத்தினால் அப்படியே விட்டு விடுகிறார்கள். ஆகையால் இன்று உதாரணமாக SBI வங்கியில் உள்ள கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..? என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்டர்நெட் பேங்கிங் மூலம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் Onlinesbi.com என்ற இணையத்தள வலைப்பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Personal Banking section முறையில் உங்களது User Name, Password என இவற்றை எல்லாம் சரியான முறையில் கொடுத்து Log in செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்தப்படியாக My Accounts & Profile என்று கொடுத்து இருப்பதை கிளிக் செய்து விட வேண்டும்.
ஸ்டேப்- 4
இப்போது அதில் கேட்கப்பட்டிருக்கும் உங்களது தகவல்கள் அனைத்தினையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய தொலைபேசி எண் எதனை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதையே கொடுத்தால் போதும்.
ஸ்டேப்- 5
கடையாக உங்களது விவரங்கள் அனைத்தினையும் சரியானதாக இருக்கிறதா என்று பார்த்து Submit என்பதை கொடுத்தாலே போதும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |