வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Paytm யூஸ் பண்றீங்களா அப்படினா இந்த டிப்ஸ தெரிஞ்சுக்கோங்க..!

Updated On: December 9, 2023 11:22 AM
Follow Us:
how to link credit card to upi paytm
---Advertisement---
Advertisement

How to Link Credit Card to UPI Paytm in Tamil

இந்த நவீன காலத்தில் சிறிய காய்கறி கடை முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால் அனைத்து இடங்களிலும் Google Pay, Phone Pay மற்றும் Paytm என இத்தகைய பண பரிமாற்ற முறை இருந்து கொண்டு தான் உள்ளது. அதன் படி பார்த்தால் வெளியே செல்லும் போது தற்போது யாரும் அதிகமாக பர்சினை எடுத்து செல்வது இல்லை. அதற்கு மாறாக போன் மற்றும் கிரிடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டினை தான் எடுத்து செல்கிறார்கள். ஏனென்றால் இப்போது எல்லாமே இவற்றை வைத்து தான் பண பரிமாற்றம் செய்கிறார்கள். இதுநாள் வரையிலும் இவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கும் முறையில் தற்போது Paytm ஒரு புதிய அம்சத்தினை அறிமுகம் செய்து உள்ளது.

அதாவது Paytm Payments முறையில் UPI System-த்தில் கிரெடிட் கார்டு வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இத்தகைய முறையினை நீங்கள் செட் செய்து வைத்துக் கொள்வதன் மூலமாக QR Code Scan செய்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் எளிய முறையில் பணத்தினை செலுத்தி கொள்ளலாம். எனவே இத்தகைய முறையினை நீங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் முதலில் Paytm-ல் Credit Card-ஐ முதலில் இணைத்து இருக்க வேண்டும். அதனால் இவற்றை எப்படி இணைப்பது என்று விரிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பேடிஎம் உடன் கிரெடிட் கார்டுடை இணைப்பது எப்படி..?

ஸ்டேப்- 1

முதலில் உங்களது போனில் உள்ள Paytm ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு அதில் தோன்றும் சில பட்டியல்களின் வரிசையில் 3-வது இடத்தில் Link Rupay Card to UPI என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

 பேடிஎம் உடன் கிரெடிட் கார்டு in tamil

அடுத்தபடியாக உங்களிடம் உள்ள கிரெடிட் கார்டின் விவரங்கள் வரும். அதில் உங்களுக்கு விருப்பமான கிரெடிட் கார்டு பேங்க்கினை தேர்வு செய்து கிளிக் செய்திடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக உங்களுடைய கார்டிற்கான UPI PIN-யை செட் செய்து விடுங்கள். அவ்வளவு தான் பேடிஎம் உடன் கிரெடிட் கார்டுடை இணைக்கும் பிராசஸ் முடிந்து விட்டது.

நீங்கள் இப்போது செட் செய்த அம்சம் வாயிலாக பணத்தினை அனுப்ப வேண்டும் என்றால் முதலில் QR Code Scan செய்து தொகையினை அதில் போட்டு விட்டு Paytm-ல் இணைத்துள்ள கிரெடிட் கார்டு மூலமாக பணம் அனுப்பி விடலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now