How to Lock Aadhaar Biometric in Maadhaar App
ஒவ்வொரு வீட்டிற்கும் அடையாளமாக வெறும் ரேஷன் கார்டு மட்டுமே இருந்த காலங்கள் அனைத்தும் மாறி தற்போது ஒவ்வொருவருக்கும், தனி தனியாக ஆதார் கார்டு ஆனது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டு 12 எண்கள் கொண்ட ஒரு கார்டாக உள்ளது. இதன் மூலம் நம்முடைய பண பரிவர்த்தனை முதல் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது. அப்படி பார்க்கையில் இந்த கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு ஆதார் கார்டு ஒவ்வொருக்கும் முக்கியமாக கருதப்படுவதனால் இதில் பல மோசடிகள் நடக்கிறது. அதனால் நமக்கான கார்டை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே ஆதார் கார்டை எவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை எப்படி லாக் செய்வது:
ஸ்டேப்- 1
முதலில் maadhaar என்ற ஆப்பை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை நீங்கள் Log in என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் உங்களுக்கான ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான OTP-யை அதில் பதிவிட்டு கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இதனை தொடர்ந்து உங்களுடைய ஆதார் விவரங்கள் ஆனது உங்கள் முன் தோன்றும். இப்போது அதன் மேல் பக்கத்தில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 4
அடுத்து அதில் வரும் Biometric என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டு Enable Biometric Lock என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக தோன்றும் Ok என்பதை கிளிக் செய்து விடுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு OTP வரும் அதையும் அதில் கொடுத்து Enter கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 6
அவ்வளவு தான் இப்படி கொடுத்த உடன் உங்களது ஆதார் விவரங்கள் ஆனது லாக் செய்யப்படும். மேலும் இவ்வாறு லாக் செய்வதன் மூலம் உங்களது விவரங்களை யாராலும் எடுக்க முடியாது.
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாறி வாட்சப்ல அப்படி ஒரு அம்சம் தெரியாதா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |