Delete Contact Recover
போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றயும் உறவினர்களின் நம்பர்களை save செய்து வைத்திருப்போம். எல்லாருடைய நம்பரையும் மெமரியில் வைத்திருக்க மாட்டோம். அடிக்கடி போன் செய்கின்ற நம்பர், மற்றும் பிடித்த நம்பர்களை மட்டும் தான் மெமரியில் இருக்கும். சில நேரங்களில் மொபைலை reset செய்வோம், இல்லையென்றால் வேறொரு போன் வாங்குவோம். அப்போது நமது பழைய போனில் இருக்கும் conatact அனைத்தும் delete ஆகியிருக்கும். அதனை மீட்டெடுக்க முடியாமல் தெரிந்தவர்களிடம் நமக்கு தேவைப்படுகின்ற நம்பரை அவர்களும் contact-ல் வைத்திருந்தார்கள் என்றால் send செய்ய சொல்லி கேட்போம். இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸ் மூலமாக ஈஸியா contact மீட்டுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Delete Contact Recovery:
உங்கள் போனில் உள்ள contact delete ஆகிவிட்டது என்றால் பீல் பண்ணாதீங்க. இந்த பதிவில் கூறியுள்ள Formet பாலோ பண்ணி contact recover செய்து கொள்ளலாம்.
ஸ்டேப்:1
முதலில் போன் settings-க்கு செல்லவும், அதில் google என்பதை கிளிக் செய்து Manage your google account என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
manage your google account என்பதை கிளிக் செய்ததும் People & sharing என்று இருக்கும் அதை செலக்ட் செய்து Contacts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:3
contact-யை கிளிக் செய்ய வேண்டும், பிறகு அதில் இடது பக்கத்தில் மூன்று கோடு இருக்கும் அதை கிளிக் செய்தால் Trash என்ற ஆப்ஷன் இருக்கும்.
ஸ்டேப்:4
Trash கிளிக் செய்ததும் நீங்கள் இதுவரைக்கும் delete செய்த contact அனைத்தும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான contact-யை Recover செய்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |