How to Reprint Pan Card in NSDL in Tamil
பான் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக இந்திய அசரசாங்கத்தின் வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒன்றாக இருக்கிறது. அதுவும் 139A இன் கீழ் வருமான வரிச்சட்டத்தின் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய பான் கார்டு மூலம் ஒருவரின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை என இவற்றை எல்லாம் எளிய முறையில் கணக்கிட முடியும். மேலும் நாள் இன்று குறிப்பிட்ட அளவினை பணத்தினை விட பான் கார்டு வைத்து இருப்பவர்கள் கூடுதலாக பெற முடியும். மேலும் இத்தனை வகையான சிறப்புகளை கொண்டுள்ள பான் கார்டு ஆனது 10 இலக்க எண்ணை கொண்டுள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பான் கார்டு வாங்கினாலும் கூட சிலர் அன்ஹா கார்டை தொலைத்து விடுகிறார்கள். ஆகவே பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் எளிய முறையில் புதிய பான் கார்டு ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது:
ஸ்டேப்- 1
முதலில் நீங்கள் NSDL என்ற இணையத்திற்குள் செல்ல வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Reprint of PAN என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 3
இப்போது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய பான் கார்டு எண், ஆதார் எண், பிறந்த தேதி என பூர்த்தி செய்ய வேண்டிய அனைத்தினையும் பூர்த்தி செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
உங்களுடைய தகவலை எல்லாம் கொடுத்து முடித்த பிறகு அதில் Submit என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்- 5
அடுத்ததாக உங்களுக்கான ஒரு பக்கம் தோன்றும் அதில் உள்ள தகவல்கள் எல்லாம் சரியானதாக இருக்கிறதா என்பதை பார்த்து கொண்டு தவறுகள் இருந்தால் மாற்றம் செய்து விடுங்கள். கடைசியாக மொபைல் அல்லது E-mail என்று இருப்பதில் ஏதேனும் ஒன்றை கொடுங்கள்.
ஸ்டேப்- 6
இதனை தொடர்ந்து உங்களுக்கான OTP வரும். அத்தகைய OTP-யை அதில் போட்டு Validate என்பதை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 7
கடைசியாக இதற்கான தொகையான 50 ரூபாயினை செலுத்தி விட்டு Continue என்பதை கொடுங்கள்.
மேலும் கூடிய விரைவில் உங்களுக்கான பான் கார்டு ஆனது வந்துவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |