How to Unsubscribe in Gmail in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் அனைவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு தேவைக்காக Gmail மற்றும் Email அக்கவுண்டை ஓபன் செய்து இருப்போம். அதில் ஒரு சிலர் ஓபன் செய்த நாள் முதல் தற்போது வரையிலும் எதையும் பயன்படுத்தாமலே வைத்து இருப்பார்கள். இதற்கு மாறாக மற்ற சிலர் அனைத்திற்கும் Gmail அக்கவுண்டை கொடுத்து இருப்பார்கள். இவ்வாறு கொடுப்பதினால் தேவையற்ற மெசேஜ்கள் தான் வருகிறது. அதேபோல் சாதாரணமாக நாம் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது ஏதவது ஒரு லிங்கிற்குள் செல்ல வேண்டும் என்றாலோ அதற்கு முதலில் நமது தனிப்பட்ட Gmail ஐடி தான் கேட்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பது நன்மையாக இருந்தாலும் கூட தேவையில்லதாக மெயில்கள் வருவதை எளிமையாக தடுக்கலாம். அதனை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையில்லாத ஜிமெயில் இருந்து விலகுவது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய Gmail-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பின்பு அதில் Inbox-ல் இதில் இருந்து நீங்கள் விலக நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு அத்தகைய பக்கத்தில் தோன்றும் 3 புள்ளிகளை கிளிக் செய்து Unsubscribe என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 4
கடைசியாக Unsubscribe செய்வது நிச்சயமாக என்று கேட்பதையும் கொடுத்து விடுங்கள்.
இப்படி கொடுப்பதன் மூலம் தேவையில்லதா பிரவுசரில் இருந்து மெயில்கள் அனைத்தும் வராது.
10 நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக இ-பான் கார்டு பெறுவது எப்படி |
How to Block Someone on Gmail Permanently in Tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய Gmail-ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
பின்பு அதில் நீங்கள் யாருடைய கணக்கினை பிளாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து அதில் டாப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 புள்ளியினை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக அதில் Block என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்தாலே போதும் பிளாக் ஆகிவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |