How to Withdraw PF Advance Amount Online
நாம் அனைவரும் பணத்தினை நமது எதிர்கால தேவைக்காக சேமித்து வைத்து இருப்போம். அந்த வகையில் நிறைய நபர்கள் PF கணக்கில் பணத்தினை சேமித்து வருவார்கள். PF என்பது வரி இல்லாத வருமானத்தினை அளிக்கும் ஒரு திட்டம் ஆகும். மேலும் முற்றிலும் வேலை செய்யும் நபரின் எதிர்கால தேவைக்கு பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நிறைய நபர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து இருந்தாலும் கூட ஏதோ ஒரு தேவைக்காக இதில் எவ்வாறு அட்வான்ஸ் பெறுவது என்று தெரியாமலே இருக்கிறார்கள். அதனால் இன்று மொபைல் மூலம் PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பெறுவது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் நீங்களும் PF கணக்கு வைத்து இருக்கிறார்கள் என்றால் பதிவை தொடர்ந்து பார்த்து அட்வான்ஸ் பெறுவது எப்படி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Advance PF Withdrawal:
ஸ்டேப்- 1
முதலில் PF UAN Login என்பதை Type செய்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு UAN – Employees’ Provident Fund Organisation என்று வரும் லிங்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் UAN Number, Password மற்றும் Captcha கேட்பதை பூர்த்தி Sign Up என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு Online Service என்பதில் CLAIM (FORM 31,19 10C & 10D)என்று கொடுக்கப்பட்டு இருப்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க |
ஸ்டேப்- 4
அடுத்தப்படியாக CLAIM (FORM 31,19 10C & 10D) என்பதில் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டிருக்கு அதனை கொடுத்து Proceed for Online Claim என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
ஒரு 5 நிமிடம் கழித்து மற்றொரு பேஜ் ஓபன் ஆகும். அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு I Want Apply For என்று இருப்பதை கிளிக் செய்து PF ADVANCE (FORM-31) என்பதை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 6
உங்களுக்கு இப்போது ஒரு Menu தோன்றும் அதில் நீங்கள் எந்த காரணத்திறகாக முன்பணம் வாங்குகிறீர்கள் என்பதை தேர்வு செய்து PF அட்வான்ஸ் தொகை மற்றும் உங்களது முகவரியினை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 7
முகவரியினை கொடுத்த பிறகு அதன் வலது பக்கத்தின் கீழே பாக்ஸை கிளிக் செய்தால் Get Aadhaar OTP என்று வரும். அதில் உங்களுடைய OTP-யினை கொடுத்து Validate OTP and Submit Claim Form என்று கொடுத்து விடுங்கள்.
இப்போது உங்களது அட்வான்ஸ் தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு சில Process முடிந்த பிறகு அட்வான்ஸ் பணம் கிடைத்து விடும்.
மொபைல் மூலம் PF தொகை எவ்வளவு இருக்குன்னு செக் பண்ணலாம்…
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |