Instagram Famous Tricks in Tamil
இந்த நவீன காலத்தில் போன் வைத்துருப்பவர்களிடம் போனை வாங்கி ஒரு முறை பார்த்தால் அதில் என்ன இருக்கிறதோ, இல்லையோ ஆனால் Fb, Instagram மற்றும் Whatspp என இவை எல்லாம் முன்னடியே இருக்கும். ஏனென்றால் இந்த சமூக செயலி எல்லாம் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தகூடிய ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு சொல்லப்போனால் பெரும்பாலான நபர்கள் இதிலேயே மூழ்கி இருக்கிறார்கள் என்பர் தான் கூற வேண்டும்.
ஏனென்றால் அவர்களிடம் நாம் என்ன சொல்கிறோம், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் எப்போதும் போனை பார்த்து கொண்டிருப்பது தான் இப்போது எல்லாம் பலரது பழக்கமாக இருக்கிறது. இந்த முறையில் பார்ப்பது என்பது அவர் அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் கூட சில முக்கியமான நன்மை அளிக்கும் விஷயங்களை கற்றுக்கொள்வது நல்லது. ஆகையால் இன்றைய பதிவில் இன்ஸ்ட்ராகிராமில் உள்ள ஒரு சிம்பிளான மற்றும் ஈசியான ட்ரிக்ஸ் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்ஸ்டாகிராம் ட்ரிக்ஸ்:
ஸ்டேப்- 1
முதலில் உங்களது இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களது இன்ஸ்டாகிராம் ஐடியை ஓபன் செய்து அதில் 3 புள்ளிகள் இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது See Shared Activity என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உங்களை எப்போது Follow செய்தார்கள் என்றும், நீங்கள் அவர்களை எப்போது Follow செய்தீர்கள் என்று தெரிந்து விடும்.
மேலும் கூடுதலாக இரண்டு பேரும் எந்த போஸ்டிற்கு எல்லாம் லைக் செய்து இருக்கிறீர்கள் என்றும், எந்த போஸ்டிற்கு எல்லாம் கமெண்ட் செய்து இருக்கிறீர்கள் என அனைத்து தகவலும் உங்களுக்கு வந்து விடும்.
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |