ஆன்லைனில் பயன்படுத்தவே கூடாத 25 Passwords | Top Most Common Passwords

Advertisement

Top Online Passwords You Should Never Use!

இப்பொழுதெல்லாம் எதை எடுத்தாலும் Login ID, Passwords, OTP தான், கரெக்டான Password-ஐ போட்டால் தான் நமக்கு தேவையானதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இது நமக்கு மிகவும் உபயோகமான ஒன்று தான், எப்படி என்றால் யாரும் நம்முடைய தகவல்களை அனுமதியின்றி பார்க்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான Password செட் செய்திருப்பார்கள், அதை கண்டுபிடிப்பது என்பது சற்றே கடினம் இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரியான Password-ஐ உபயோகிக்கிறார்கள், ஆனாலென்ன அவர்களின் தளம் தான் மாறுபடுமே தவிர Password அதாவது கடவுச்சொல் பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

Password-ஐ தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினம் அல்ல என்றாலும், பலர் இன்னும் பலவீனமான Password-ஐ பயன்படுத்துகின்றனர், அதனால் அவை எளிதில் சிதைக்கப்படுகின்றன.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆன்லைனில் பயன்படுத்தவே கூடாத கடவுச்சொல்

பொதுவாக அனைவரும் ஒரே மாதிரியான தேர்வைச் செய்துள்ளோம்—குறிப்பிடத்தக்க ஆன்லைன் கணக்குகள் அல்லது கேஜெட்டுகளுக்கு எளிமையாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படும் Password-ஐ தான் வைத்துள்ளோம். இதனால் அவர்களது டேட்டா ஹேக்கர்கலால் எளிதில் கண்டுபிடிக்கப்படும். நாம் யூகிக்க முடியாதவண்ணம் சவாலான வலுவான கடவுச்சொல்லை வைத்திருந்தால் சைபர் கிரைமினல்களால் கணக்கு ஊடுருவலைத் தடுக்கலாம்.

2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?

Most Popular 25 Passwords in the World

ஆன்லைன் சேவைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் Password பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். பாதுகாப்பான Password-ஐ அமைப்பது முக்கியமான பல காரணங்களில் ஒன்று, அதை Hack செய்வது கடினமாக இருக்கும். அதனால் உங்களுடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

பெரும்பாலான மக்கள் பொதுவாக எந்த வகையான Passwords-ஐ தேர்வு செய்கிறார்கள் என்று நீங்கள் இப்போது யோசித்துக்கொண்டிருக்கலாம். தனிநபர்கள் பயன்படுத்த விரும்பும் சில பிரபலமான Passwords சமீபத்திய NordPass அறிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

  • 123455
  • admin
  • 12345678
  • 1238456789
  • 1234
  • 12345
  • password
  • 123
  • Aa123456
  • 12345678901
  • UNKNOWN
  • 1234567
  • 123123
  • 111111
  • Password
  • 12345678910
  • 000000
  • admin123
  • ********
  • user
  • 1111
  • P@ssw0rd
  • root
  • 654321
  • qwerty

அச்சுறுத்தும் *401* தொலைபேசி அழைப்பு மோசடி

நீங்கள் இதில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு Password-ஐ பயன்படுத்திவருகிறீர்கள் என்றால் உடனே அதை மாற்றிவிடுங்கள் இல்லையெனில் அதனை எளிதாக hack செய்து விடுவார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement