2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?

Advertisement

Most Deleted App in 2023!!!

நம்முடைய உலகம் ஐம்பூதங்களால் இயங்குகிறதோ இல்லையோ, தினந்தோறும் smartphone-களால் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு app-கலை நம்முடைய கருத்தை தெரியவைப்பதிலிருந்து நம்முடைய ஆரோக்கியம், டிக்கெட் புக்கிங் போன்ற எல்லாவற்றிற்கும் நம்முடைய smartphone-ல் இன்ஸ்டால் செய்து அதனால் பயன்பெற்றுவருகிறோம். நாம் ஒரு app-ஐ முழுவதுமாக வைத்திருக்கமாட்டோம் அதன் தேவை குறைந்தால் அதனை Unistall செய்துவிடுவோம், இது ஒரு சாதாரண விஷயம் தான்.

ஆனால் ஆய்வுகளை பார்த்தால் நமக்கு மிகவும் வியப்பாக இருக்கும், ஏனென்றால் ஒரு மாதத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் சில app-கல் Unistall செய்யப்பட்டிருக்கும் அது என்னவென்று இந்தப்பதிவை பார்த்து தெரிந்துகொள்வோம்.

இன்ஸ்டாகிராம்ல உள்ள இந்த ட்ரிக் உங்களுக்கு தெரியாதா

Most Uninstalled App in 2023 in Tamil

2023-ஆம் ஆண்டு பயனர்களால் பெரிய அளவில் அதாவது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் தேடப்பட்ட வார்த்தை “how to delete my Instagram account (எனது இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது)” என்பதுதான். மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் App-களில் ஒன்றுதான் இன்ஸ்டாகிராம். 

2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி (10,20,000) நபர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ரத்து செய்துள்ளதாக 12 மாத கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஆரம்பத்தில், 1990 களின் பிற்பகுதியிலிருந்து 2010 களின் முற்பகுதியில் பிறந்தவர்கள் அல்லது ஜெனரேஷன் Z இன்ஸ்டாகிராமிற்கு ஈர்க்கப்பட்டு, அவர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டுவந்தது. இப்பொழுதும் இருக்கும் new features 2K குழந்தைகளை மிகவும் ஈர்த்துள்ளது. இப்படி இருந்தும் மக்கள்களிடம் உள்ள ஆர்வம் குறைந்துவிட்டது அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தலைமுறைகளின் ரசனைகள் பெரிதும் மாறிவிட்டன.

2023 முடியறதுக்குள்ள இதெல்லம் நீங்க கட்டாயம் பண்ணிருக்கணும்

Why users uninstall apps

கீழுள்ள பலகாரணங்களால் மக்கள் தங்களது செயலிகளை uninstall செய்கின்றனர்.

  • மோசமான பயன்பாட்டின் செயல்திறன்
  • போட்டியிடும் பயன்பாடுகள்
  • பூர்த்தி செய்யப்படாத தேவைகள்
  • பயனர் அனுபவத்தில் உள்ள குறைபாடுகள்.

அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யப்படுவதற்கான காரணம்:

உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் இது சிலகாரணங்களால் uninstall செய்யப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வளர்ச்சியின்மை
  • செயலில் உள்ள பிரபலங்களின் இருப்பு இல்லாமை
  • பிராண்டுகளை விளம்பரப்படுத்த தளத்தைப் பயன்படுத்தி செல்வாக்கு செலுத்துபவர்களின் அதிகரிப்பு

இவையே வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணங்களாக அறிக்கையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான TRG டேட்டாசென்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் பயன்படுத்தவே கூடாத 25 Passwords

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement