பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
இன்றைய கால கட்டத்தில் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இருந்தாலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதற்கு ஸ்டூடியோவுக்கு தான் செல்கிறார்கள். எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, படிப்பிற்கு அப்ளை செய்தாலும் சரி Application Form -ல் Passport Size போட்டோ கேட்கிறார்கள். அப்போது நீங்கள் ஸ்டுடியோவுக்கு தான் செல்கிறார்கள். இனிமேல் நீங்கள் ஸ்டுடியோவுக்கு சலீல் தேவையில்லை. உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் பாஸ்போர்ட் சைஸ் எடுக்கலாம். வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Passport Size Photo Online Free Mobile in Tamil
இந்த பதிவில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதற்கு வலைத்தளங்களை தான் பயன்படுத்த போகின்றோம். இந்த வலைதளத்திற்கு Payment செலுத்த தேவையில்லை. Free -யாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Download செய்து கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் சென்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Download செய்து கொள்ளலாம்.
ஸ்டேப்:1
Cutout pro என்று google-லில் சர்ச் செய்து கொள்ளவும். பிறகு அதில் முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
ஸ்டேப்:2
வலைத்தளத்திற்கு சென்றதும் முதலிலே product என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்ததும் நிறைய ஆப்ஷன்கள் வரும், அதில் passport photo maker என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப்:3
பிறகு Upload image என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு எந்த போட்டோ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆக வேண்டுமோ அதை Upload செய்யவும்.
பிறகு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவாக கன்வெர்ட் ஆகிடும்.
ஸ்டேப்:4
இடது புறத்தில் download Hd என்ற ஆப்ஷனுக்கு பக்கத்தில் முக்கோணம் உலா குறியை கிளிக் செய்யவும். கிளிக் செய்ததும் Png or jpeg என்று கேட்கும்.
அதுல உங்களுக்கு எப்படி வேண்டுமோ அதை கிளிக் செய்து download செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் மொபைல் Gallery -யில் Save ஆகியிருக்கும். இந்த போட்டோவை கடையில் கொடுத்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |