Play Audio Tone Instead of Disclaimer in Google Dialer
ஆரம்ப காலத்தில் எல்லாம் ஒருவரை பார்க்க வேண்டும் என்றாலோ அல்லது அவரது குரலை கேட்க வேண்டும் என்றாலும் அதிகபட்சமாக நேரில் சென்று தான் சந்திக்க வேண்டிய சுழல் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் செலவு என்ற சொல்லுக்கு இடமே கிடையாது. ஏனென்றால் ஒரே ஒரு முறை நாம் செலவு செய்து வாங்கும் ஆண்ட்ராய்டு போனில் இவை அனைத்துமே கிடைக்கும். நமக்கு ஒருவரை பார்க்க வேண்டும் போல் இருந்தால் போதும் உடனே வீடியோ கால் செய்து பார்க்கலாம். அதுவே ஒருவரது குரலை எப்போதும் கேட்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடன் பேசும் போது Call Record செய்தாலே போதும் அதனை எப்போது வேண்டுமானாலும் வைத்து கேட்டுக்கொள்ளலாம்.
அந்த வகையில் Call Record என்பது இதற்காக மட்டும் இல்லாமல் நம்மிடம் வேறு யாரும் முகம் தெரியதா நபர்கள் போன் செய்து பேசினாலும் கூட அது யார் என்று கண்டுபிக்க Record செய்யவும் உதவுகிறது. இப்படிப்பட்ட Call Record-ல் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு Settings பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Google Dialer Call Recording Setting:
ஸ்டேப்- 1
முதலில் உங்களது Call Dialer App-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு 3 புள்ளிகளை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
பின்பு அதில் Call Recording என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4

அடுத்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Play Audio Tone Instead of Disclaimer என்பதை On செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
இத்தகைய Settings-ஐ நீங்கள் On செய்வதன் மூலம் Call Record செய்யும் போது எந்த விதமான சத்தமும் இருக்காது மற்றும் ஏதேனும் வாய்சும் வராது.
பலருக்கு தெரியாத புதிய அப்டேட் எதுல வந்துருக்குனு தெரியுமா
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |














