Set UPI PIN With Aadhar Card in Tamil
இந்த காலத்தில் உள்ளவர்களை பொறுத்தவரை கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் பேங்க் அக்கவுண்ட், கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் என இதுபோன்ற பல சேவைகளின் வசதியினை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் இவற்றை எல்லாம் நமக்கு ஏதுவானதாக இருந்தாலும் கூட பாதுகாப்பு என்பது நாம் வைத்துக்கொள்ளும் மற்றும் பயன்படுத்தும் முறையை பொறுத்து தான் அமைகிறது. அந்த வகையில் இதுபோன்ற சேவைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக தான் ஒவ்வொருவருக்கும் PIN நம்பர் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மற்றவர்கள் யாரும் உங்களது சேவையினை தவறுதலாக பயன்படுத்தி பணம் மோசடி நடந்து விடக்கூடாது என்பதே இதனுடைய மையக்கருத்து என்றும் கூட சொல்லலாம். அப்படி பார்த்தால் தற்போது UPI PIN செட் செய்வதில் ஒரு புதிய அம்சம் வந்து இருக்கிறது. அதாவது உங்களது UPI பின்னை இனி ஆதார் கார்டு மூலமாக செட் செய்து கொள்ளலாம். அதனை எப்படி செட் செய்வது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
யுபிஐ பின் ஆதார் கார்டு மூலம் செட் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் உங்களது போனில் இருக்கும் கூகுள் பேவை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு UPI PIN செட் செய்வதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு Debit/ATM Card மற்றும் Aadhaar என்ற Option காண்பிக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Aadhaar என்பதை கிளிக் செய்து Continue என்பதை கொடுத்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்தப்படியாக உங்களது ஆதார் கார்டில் உள்ள முதல் வரிசை 6 எண்களை அதில் கொடுங்கள்.
ஸ்டேப்- 4
இப்போது உங்களுளது போன் நம்பருக்கு OTP வரும். ஆகவே இந்த OTP-ஐ கொடுத்தீர்கள் என்றால் UPI PIN செட் செய்யும் அம்சம் காண்பிக்கும்.
ஸ்டேப்- 5
கடைசியாக உங்களுக்கு இந்த PIN-ஐ கொடுக்க வேண்டுமோ அதனை கொடுத்து UPI PIN செட் செய்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த PIN நம்பரை Reset செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான வாய்ப்புகளும் இதில் இருக்கிறது. அதேபோல் மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் மற்றும் கூகுள் பே என இவை அனைத்தும் ஒரே நம்பரில் இருக்க வேண்டும்.
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |