Two Whatsapp Accounts on One Phone in Tamil
இன்றைய காலா தலைமுறையினர் வாட்சப் இல்லாவிட்டால் வாழ்க்கையே என்று கூறும் அளவிற்கு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைவரிடமும் போய் சேர்ந்து பல மில்லியன் யூசர்களை கொண்டுள்ளது. மேலும் எப்பேர்ப்பட்ட எளிமையான மற்றும் முக்கியமான செய்திகளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இருப்பவர்களுக்கு உடனே தெரிவிப்பதற்கும் இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு இதில் பல அம்சங்கள் இருப்பதனால் மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்சப்பில் மற்றொரு அசத்தலான அம்சமும் வந்துள்ளது. ஆகவே அது என்ன அம்சம் என்றும் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸ்அப் புதிய வசதி:
ஆண்ட்ராய்டு மற்றும் Iphone வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் 2 விதமான சிம் கார்டுகளை பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். அதேபோல் ஒரு சிலர் இரண்டு விதமான போன்களையும் பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்.
அப்படி பார்த்தால் இவ்வாறு இரண்டு இரண்டாக பயன்படுத்தவர்கள் 2 விதமான வாட்ஸப்பையும் வைத்து இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு என்று வாட்ஸப்பில் ஒரு புதிய வசதி வந்துள்ளது.
அதாவது ஒரே போனில் 2 விதமான வாட்ஸப்பை பயன்படுத்தலாம் என்றும், அதனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த அம்சம் வருவதன் மூலம் பயனர்கள் 2 போன்களை தனித்த்னியாக பயன்படுத்தாமல் ஒரே போனில் 2 வாட்ஸப் கணக்கையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விரைவில் இது அறிமுகம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
YouTube சாட்ல யாருக்கும் தெரியாத அட்டகாசமான 3 ட்ரிக்ஸ் இதோ உங்களுக்காக
How to Use Two Whatsapp in One Mobile in Tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களது வாட்ஸப் கணக்கினை ஓபன் செய்து கொண்டு அதில் உங்களது Profile-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு உங்களது பெயருக்கு கீழே தோன்றும் ஏரோ மார்க்கினை கிளிக் செய்து Add account என்பதை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப்- 3
இவ்வாறு கொடுத்த முடித்த பிறகு Agree and continue என்று இருப்பதையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக உங்களது மொபைல் எண்ணை அதில் பூர்த்தி செய்து Next என்று உள்ளதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
இதனை தொடர்ந்து Accept or deny permissions என்பதை கிளிக் செய்தால் போதும் மற்றொரு வாட்ஸப் கணக்கு ஆனது வந்து விடும்.
உங்களது போனில் இந்த அம்சம் வந்த பிறகு தான் நீங்கள் இதனை செட் செய்ய முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |