Phonepe Transaction Limit Per Day
பொதுவாக இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களிடம் Gpay, Phonepe வசதி உள்ளது. சின்ன கடை முதல் ஹோட்டல் வரை இதனை பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எங்கு சென்றாலும் பணம் எடுத்து செல்ல தேவையில்லாததால் பலரும் இதனை பயன்படுத்துகிறார்கள். நாம் ATM-யில் பணம் எடுக்கும் போது இவ்வளவு தான் பணம் எடுக்க வேண்டும் என்ற வரம்பு இருக்கிறது. அதே போல UPI ஆப்களிலும் பணம் செலுத்துவதற்கான வரம்பு இருக்கிறது. இதனை பற்றி எத்தனை பெயருக்கு தெரியும், தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த பதிவில் UPI ஆப்களில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Gpay மூலம் எவ்வளவு பணம் செலுத்த முடியும்:
Gpay ஆப் பயன்படுத்துகிறவர்கள் ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கு மேல் பணத்தை செலுத்த முடியாது. அதே போல ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனைகள் தான் செய்ய அனுமதிக்கும். அதற்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. 1 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள தொகையை 10 வர்த்தனைகள் மூலம் பிரித்து செலுத்தி கொள்ளலாம்.
PhonePe மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பரிவர்த்தனை செய்ய முடியும்:
Phonepe ஆப்பிலும் Gpay போலவே ஒரு நாளைக்கு 1 லட்சம் தான் செலுத்த முடியும். ஆனால் இதில் பரிவர்த்தனைக்கான எந்த வரம்பும் கிடையாது. எத்தனை பரிவர்த்தனை வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
அமேசான் பே:
அமேசான் பே ஆனது ஒரு நாளைக்கு 1 லட்சம் செலுத்தி கொள்வதற்கு அனுமதிக்கிறது. மேலும் இதில் 20 பரிவர்த்தனைகள் வரை செய்து கொள்ள முடியும். இந்த புதிதாக வரும் பயனர்கள் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் 5000 வரை மட்டும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
Call Record செய்வதற்கு முன்பாக இந்த Settings பற்றி தெரிந்துகொள்ளுங்கள் யூஸ் ஆகும்…!
Paytm, மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பரிவர்த்தனை செய்ய முடியும் :
Paytm ஆப்பில் ஒரு நாளைக்கு 1 லட்சம் வரைக்கும் மட்டுமே செலுத்த முடியும். இதில் ஒரு மணி நேரத்தில் 20,000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ள முடியும்.இதில் ஒரு மணி நேரத்தில் 5 பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனைகள் வரை செய்ய முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |