Whatsapp Channel Emoji Update 2023 Tamil
நவீன காலத்து மக்கள் சமூக ரீதியாகவும், படிப்பு ரீதியாகவும், தொழில்நுட்பம் ரீதியாகவும் பல வகையான செய்திகளை அவர் அவர் வைத்து இருக்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் அறிந்து வருகிறது. அதிலும் வாட்ஸப் மூலம் எண்ணற்ற பலன்களையும் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸப்பில் ஒரு புதிய அப்டேட் ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸப் சேனல் என்ற அம்சம் ஆனது வந்துள்ளது. இத்தகைய அப்டேட் ஆனது வாட்சப் யூசர்களுக்கு மற்றொரு புதிய பரிணாமத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதுநாள் வரையிலும் இவ்வாறு செயல்பட்டு கொண்டிருந்த வாட்ஸப் சேனலில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகவே அது அப்டேட் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸப் சேனல் புதிய அப்டேட்:
நம்மில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாட்ஸப் சேனல் ஆனது 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த சேனல் இந்தியாவில் மட்டும் இல்லாமல் மொத்தமாக 150 நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சேனல் வாயிலாக நீங்கள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து செய்திகள், தகவல்கல் என இவற்றை எல்லாம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்படிப்பட்ட அம்சங்களை எல்லாம் நீங்கள் பெற தனியாக ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் வாட்ஸப் மூலமாகவே இவை அனைத்தினையும் பார்க்கலாம்.
இவ்வாறு இருக்கும் இந்த வாட்ஸப் சேனல் மூலமாக மெசேஜ் செய்வது, வீடியோ, போட்டோ மற்றும் GIF என இவற்றை எல்லாம் இதுநாள் வரையிலும் நீங்கள் அனுப்பி இருப்பீர்கள்.
இனி வரும் களங்களில் இந்த வசதி இல்லாமல் மற்றொரு அம்சமும் உங்களுக்கு வரவிருக்கிறது. அதாவது உங்களது வாட்ஸப் சேனல் மூலமாக ஸ்டிக்கர் மற்றும் வாய்ஸ் மெசேஜ் என இவற்றை எல்லாம் அனுப்பிக்கொள்ளலாம் என்றும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் மெட்டா கூறியுள்ளது.
எனவே இந்த புதிய அம்சத்தை நீங்கள் பெற உங்களது வாட்ஸப்பை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும். மேலும் சாட் செய்யும் மெசேஜ்களை மற்றவர்கள் பார்க்காமல் இருப்பதற்கான சாட் லாக் அம்சமும் விரைவில் வரும் என்றும் கூறியுள்ளது.
உங்களுக்கான ஒரு அப்டேட்டுங்க அதுவும் நம்ம வாட்ஸப்ல என்னனு தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |