அட்ரா சக்க இந்த மாதிரியெல்லாம் அப்டேட் கொடுத்தா வாட்சப் யூஸ் பண்ணாம இருக்க முடியுமா.?

Advertisement

வாட்சப் சேனலில் வந்த அப்டேட்

உலகில் அதிகமாக பயன்படுத்த கூடிய சமூக வலைத்தளங்களில் வாட்ஸப்பும் ஒன்று. இந்த வாட்ஸப்பில் மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றை பகிரும் கேசாதிகள் உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருப்பவர்களை கூட பக்கத்தில் இருப்பது போல உணர்வை வீடியோ கால் கொடுக்கிறது. வாட்சப் ஆனது தங்களின் பயனர்களை தக்க வைத்து கொள்வதற்காக பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வந்த அப்டேட் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்சப் சேனலில் வந்த அப்டேட்:

வாட்சப் சேனலில் வந்த அப்டேட்

வாட்சப் சேனல் என்ற அமசத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் தான் ஒரு அப்டேட்டை வழங்கி உள்ளது.

அதாவது வாட்சப் சேனலில் உள்ள செய்திகளை தவறாக அனுப்பினால் அதை  திருத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 30 நாளில் உள்ள செய்திகளை மட்டுமே திருத்த முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

செய்திகளை மட்டும் தான் திருத்த முடியும், போட்டோ, வீடியோ போன்றவற்றை திருத்த முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

இன்னொரு அம்சம் என்னவென்றால் நீங்கள் செய்தியை திருத்திய பிறகு இந்த செய்தி திருத்திய செய்தி என்று பயனர்களுக்கு எந்த விதமான Nofification-யும் போகாது.

YouTube சாட்ல யாருக்கும் தெரியாத அட்டகாசமான 3 ட்ரிக்ஸ் இதோ உங்களுக்காக 

வாட்ஸ்அப் சேனல்களில் எடிட் செய்வது எப்படி?

வாட்சப் சேனலில் வந்த அப்டேட்

நீங்கள் எந்த செய்தியை திருத்தும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை லாங் பிரஸ் செய்ய வேண்டும்.

பின் அதில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்து திருத்து என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு காசோலை குறியை தட்ட வேண்டும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement