Whatsapp Email Verification in Tamil
பாதுகாப்பு என்பதில் மற்றவர்களை எதிர்பார்ப்பது மிகவும் தவறானது. ஏனென்றால் நமக்கான பாதுகாப்பினை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் நமக்கு நன்மைகள் எப்படி இருக்கிறதோ அதே அளவில் தீமைகளையும் இருக்கிறது. ஆனால் அவற்றை நாம் அந்த அளவில் கவனிப்பது இல்லை. அதேபோல் ஒரு புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும் போதும் கூட அதில் கேட்கப்பட்டிருப்பதை நாம் ஒருபோதும் படிக்காமல் உடனே அனைத்திற்கும் Aollow கொடுப்பதை ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறோம். அப்படி பார்த்தால் பல மில்லியன் கணக்கில் யூசர்களை வைத்து இருக்கும் மெட்டா நிறுவனம் தன்னுடைய யூசருக்கான பாதுகாப்பை நோக்கமாக வைத்து ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. ஆகவே அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்சப்பின் புதிய இமெயில் வெரிஃபிகேஷன் அப்டேட்:
நாம் வைத்து இருக்கும் போனாக இருந்தாலும் சரி அல்லது புதியதாக வாங்கி வந்த போனாக இருந்தாலும் சரி அதில் வாட்ஸப் ஓபன் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மொபைல் எண் கண்டிப்பாக அவசியம்.
ஏனென்றால் உங்களது முதலில் போன் நம்பரை கொடுத்த பிறகு ஒரு OTP வரும். அதன் பிறகு அந்த OTP-ஐ போட்ட பிறகு தான் வாட்ஸப் ஓபன் ஆகும். இத்தகைய முறை பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணி தற்போது மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
அதாவது Email ID வைத்து வாட்ஸப்பில் வெரிஃபிகேஷன் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் உங்களது Email ID-யை வைத்து நீங்கள் வெரிஃபிகேஷன் செய்யலாம். மேலும் இந்த அம்சம் தற்போது சில அம்சங்களுக்கு மட்டும் கிடைக்கும் என்றும், அதன் பிறகு மற்ற யூசர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உங்களது மொபைலில் செலுலார் டேட்டா இல்லாத போது (அ) குறைந்த மொபைல் நெட்ஒர்க் டேட்டா இருக்கும் இடங்களில் Broadband Internet அல்லது Wi-fi மூலம் Email ID கொண்டு உங்களது வாட்சப் அக்கவுண்ட்டை ஆக்டிவ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்போடுகிறது.
ஒருவேளை உங்களது மொபைல் மற்றும் மொபைல் எண் தொலைந்த் போனாலும் கூட இந்த அம்சம் உங்ககளுக்கு உதவியாக இருக்கும்.
ஆதார் கார்டு இல்லாமலே உங்களது ஆதார் எண்ணை தெரிஞ்சுக்கலாம் எப்படி தெரியுமா |
How to Verify Whatsapp Using Email in Tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களது வாட்சப்பை ஓபன் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Settings என்பதை கிளிக் செய்து Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 3
கடைசியாக Email Address என்பதை கொடுத்தால் உங்களுக்கு ஒரு OTP வரும். அதன் பிறகு அந்த OTP-யை பூர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் இத்தகைய முறையிலேயே உங்களது வாட்சப்பில் இமெயில் வெரிஃபிகேஷன் செய்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |