Whatsapp IP Protect Options in Tamil
ஒரு விஷயம் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு படித்து இருக்க வேண்டியது இல்லை என்பதற்கு அனைவருக்கும் முன் உதாரணமானாக இருப்பது என்னவோ வாட்ஸப் மட்டுமே. ஏனென்றால் மெட்டா நிறுவனத்தின் இத்தகைய வாட்ஸப்பையே பலரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் அனைவரும் இமேஜ், டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் மற்றும் ஸ்டிக்கர் என இதுபோன்ற பல அம்சங்களை இதுநாள் வரையிலும் யூசர்கள் பயன் அடைந்து கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் தற்போது இவற்றை எல்லாம் தாண்டி ஒரு புதிய அப்டேட் வாட்ஸப் யூசர்களுக்கு வந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த அப்டேட் ஒரு பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஆகவே அது என்ன அப்டேட் என்று விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸப்பில் புதிய IP அட்ரஸ் அப்டேட்:
உங்களுடைய போனில் இருந்து மற்றொரு போனிற்கு வாய்ஸ் கால்கள் பேசும் போது நம்முடைய தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கும். இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கான ஒரு அப்டேட் தான் இப்போது வந்துள்ளது.
அதாவது Whatsapp IP Address Protect அம்சம் ஆனது உங்களுடைய Location முதல் இதர அனைத்தினையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் தற்போது இந்த அம்சம் சில யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், பின்பு அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. அதேபோல் இது End to End Encryption ஆப்ஷனை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பான் கார்டு தொலைஞ்சு போயிட்டா.. அப்போ புதுசு எப்படி வாங்கனும் தெரியுமா.. |
Whatsapp IP Protect Feature for in tamil:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய போனை ஓபன் செய்து அதில் வாட்ஸப்பை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
பின்பு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து Settings என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்தபடியாக அதில் இருக்கும் Privacy என்பதை கிளிக் செய்து Advanced என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக Protect IP Address in Calls என்பதை கிளிக் செய்து Toggle on the switch என்று இருப்பதையும் On செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்தாலும் போதும் நீங்கள் யாருடன் கால்ஸ் பேசினாலும் கூட அவர்களுக்கு உங்களுக்கு IP Address மற்றும் Location ஆனது காண்பிக்காது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |