DP Whatsapp Update 2023
உலகில் அதிகமாக பயன்படுத்த கூடிய சமூக வலைத்தளங்களில் வாட்ஸப்பும் ஒன்று. இந்த வாட்ஸப்பில் மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ போன்றவற்றை அனுப்பும் வசதி உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருப்பவர்களை கூட அருகில் இருப்பது போல உணர்வை தருகிறது. இதை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்துகிறார்கள். அதனால் இதில் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய விதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் Profile-லில் அப்டேட்டுகளை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Whatsapp New Update Profile Picture in Tamil:
வாட்சப் Profile-லில் பலரும் தங்களுக்கு பிடித்த போட்டோக்களை வைத்து கொள்கின்றனர். எங்கேயாவது வெளியில் சென்றால் அந்த போட்டோவை உடனே ஸ்டேட்டஸ் ஆகவும், Profile-லிலும் வைத்து கொள்கின்றனர்.
இந்த Profile ஆனது செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும், அதாவது காண்டாக்ட் உள்ளவர்களுக்கு மட்டும் dp காட்ட வேண்டுமா, அல்லது எல்லாருக்கும் காட்ட வேண்டுமா என்று இருக்கும். அதில் தங்களின் விருப்பத்திற்கு போல் அமைத்து கொள்வீர்கள்.
அட்ரா சக்க இந்த மாதிரியெல்லாம் அப்டேட் கொடுத்தா வாட்சப் யூஸ் பண்ணாம இருக்க முடியுமா
நீங்க உங்க காண்டாக்ட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் DP காட்ட வேண்டும் என்று செட் செய்தால் மற்றவர்களுக்கு உங்க DP ஆனது Empty ஆக இருக்கும்.
அந்த வகையில் மெட்டா Profile-லில் தனது அப்டேட்டை வழங்க உள்ளது. அது என்னவென்றால் உங்களுடைய காண்டாக்ட் இருப்பவர்களுக்கு ஒரு Profile-யும், contact-லில் இல்லாதவர்களுக்கு ஒரு போட்டோவும் வைக்கும் வசதியை சோதனைப்படுத்தி வருகிறது.
Whatsapp Username Update:
மேலும் வாட்சப்பில் ஒருவர் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை அவர்களின் நம்பரை வைத்து தான் அறிய முடியும். இதில் ஒரு மாற்றமாக பயனர் பெயரை வைத்து அறியும் வசதியை சோதனை செய்து வருகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |