Whatsapp Video Update
இந்த காலத்தில் ஆண்ட்ராய்டு போன் வைத்து இருக்கும் நபர்கள் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் Facebook என இதுபோன்ற செயலிகளை பயன்படுத்த தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலுமே கண்டிப்பாக வாட்ஸப் பயன்படுத்த தெரிந்த ஒரு நபராகவே இருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது வாட்ஸப் அனைவருக்கும் எளிய முறையில் செய்திகளை உடனுக்குடன் அனுப்பவும், போட்டோ முதல் வீடியோக்கள் என இவற்றை எல்லாம் பகிரவும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு பல அம்சங்களை கொண்டுள்ள யூசர்களின் எண்ணிக்கையினை நம்மால் கணக்கிடவே முடியாது. அந்த வகையில் மெட்டா நிறுவனமும், வாட்ஸப்பில் பல அம்சங்களை பகிர்ந்து உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது மெட்டா நிறுவனம் மற்றொரு புதிய அப்டேட்டையும் கொண்டுள்ளது. அதனால் அது என்ன அப்டேட் என்பதை விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸப் வீடியோ புதிய அப்டேட்:
பொதுவாக வாட்சப்பில் ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை வீடியோக்கள் மூலம் வாட்சப்பில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் யூடூபில் ஒரு வீடியோவை நாம் பார்த்து கொண்டிருக்கும் போது அதனை முன்னோக்கி அல்லது பின்னோக்கி நமக்கு தேவைப்பட்ட மாதிரி நகர்த்துவோம்.
இதுபோன்ற அம்சமானது தற்போது மெட்டாவிற்கு சொந்தமான வாட்பசப்பிலும் வரவு உள்ளது என்று பிரபல இணையதளமான WABetaInfo கூறியுள்ளது.
அப்படி பார்க்கையில் நாம் ஏதோ ஒரு வீடியோவை வாட்ஸப்பில் பார்த்து கொண்டிருக்கின்றோம் என்னும் போது Double Tap என்ற அம்சத்தின் மூலம் அந்த வீடியோவில் இருந்து முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வதற்கு இடது அல்லது வலது பக்கம் இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
யாருக்கெல்லாம் இந்த அம்சம் கிடைக்கும்:
இத்தகைய அம்சம் ஆனது தற்போது 2.23.24.6 என்ற ஆண்ட்ராய்டு பீட்டா வர்சனுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதன் பிறகு மற்ற அனைத்து யூசர்களும் இந்த அம்சத்தினை பெறலாம் என்றும் கூறியுள்ளது.
எப்படி இந்த அம்சம்தை பெறுவது:
உங்களது வாட்ஸப்பை நீங்கள் அப்டேட் செய்வதன் மூலம் இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கும்.
அட்ரா சக்க இந்த மாதிரியெல்லாம் அப்டேட் கொடுத்தா வாட்சப் யூஸ் பண்ணாம இருக்க முடியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |