Whatsapp Web யூஸ் பண்றீங்களா..? அப்போ இந்த Settings தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Whatsapp Web Screen Lock in Tamil

ஹாய் நண்பர்களே…! தினம் தினம் நாம் பயன்படுத்தும் போனில் என்ன மாதிரியான தீமைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அது நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் அதில் உள்ள Settings மற்றும் சில முக்கியமான விஷயங்களை பிறரிடமும் உதவி கேட்கவில்லை என்றாலும் கூட இன்டெர் நெட் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால் யாரும் உங்களுது சந்தேகங்களுக்கு விடை அளிக்கவில்லை என்றாலும் கூட இன்டர்நெட் தாராளமாக விடை அளிக்கும்.

அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் போனில் என்னென்ன Settings உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை கட்டாயமாக தெரிந்துகொள்ளுங்கள். மேலும் அதில் காணப்படும் சின்ன சின்ன டிப்ஸ் & ட்ரிக்ஸினையும் தெரிந்து வைத்துக்கொள்வது ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை அளிக்கக்கூடியதாகவே காணப்படுகிறது. ஆகையால் இன்றைய டெக்னாலஜி பதிவில் வாட்ஸஅப் போலவே வாட்ஸஅப் வெப் அதிகமாக பயன்படுத்துவோருக்கான ஒரு Settings தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்ஸ்அப் வெப் ஸ்கிரீன் லாக் செய்வது எப்படி..?

ஸ்டேப்- 1

முதலில் உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் வெப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு வாட்ஸ்அப் வெப்பில் வலது மூளையில் காணப்படும் 3 புள்ளிகளை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

வாட்ஸ்அப் வெப் ஸ்கிரீன் லாக் செய்வது எப்படி

அடுத்து அதில் இருக்கும் Privacy என்பதை கிளிக் செய்து பின்பு Screen Lock என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

how to whatsapp web screen lock in tamil

இப்போது அதில் உங்களுக்கான புதிய Password கேட்கும், ஆகவே அதனை கொடுத்து விடுங்கள். மீண்டும் அதே Password-ஐ கொடுத்து Ok கொடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

whatsapp web screen lock

கடைசியாக உங்களுக்கு மூன்று வகையான டைமிங் தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து Ok கொடுத்து விடுங்கள்.

இத்தகைய Settings-ஐ உங்களது வாட்ஸ்அப் வெப்பில் செய்து வைத்து கொள்வதன் மூலம் உங்களது வாட்ஸ்அப் வெப் தானாகவே லாக் ஆகி விடும். மீண்டும் இதனை ஓபன் செய்யும் போது Password கேட்கும்.

ஆகவே இதனை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது வாட்ஸ்அப் வெப் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆக்டீவில் இருக்காது. மேலும் தெரியாதவர்கள் யாரும் இதனை பயன்படுத்த முடியாது.

Paytm யூஸ் பண்றீங்களா அப்படினா இந்த டிப்ஸ தெரிஞ்சுக்கோங்க 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement