Amazon Logo -வில் எதுக்கு இந்த அம்புக்குறி இருக்கு தெரியுமா..?

Advertisement

Amazon Name History in Tamil

பொதுவாக நாம் அனைவரும் ஆன்லைன் பொருட்கள் வாங்குவது வழக்கம். நிறைய ஆன்லைன் தளங்கள் இருந்தாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு தளம் என்றால் அது தான் அமேசான் ஆகும். இதில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. அந்த அளவிற்கு பொருட்கள் அதில் கொட்டிகிடக்கும். அதேபோல் ஆயிரம் தளங்கள் இருந்தாலும், அதில் சரியாக அமேசான் என்ற அடையாளத்தை மக்கள் அனைவருமே மிகவும் துல்லியமாக கண்டறிந்து அதில் பொருட்களை வாங்கி பயன்பெறுகிறார்கள். ஆமாம் எனக்கு ஒரு யோசனை தோன்றியது அது என்ன தெரியுமா..? அமேசான் லோகோவை யார் வடிவமைத்தது..? ஏன் அதை அப்படி ஒரு வித்தியாசமாக வடிவமைத்தார் இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன..? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Amazon Name History in Tamil:

அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது இணையவழி தளம் ஆகும். இந்த நிறுவனம் Staples Inc நிறுவனத்தை விட மூன்று மடங்கு பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை உருவாக்குவதை 1994 –ல் தொடங்கி, 1995 ஆம் ஆண்டு இணையத்தில் பொருட்களை வாங்க நடைமுறைக்கு வந்தது.

இதனை உருவாகியவர் ஜெப் பெசோஸ் ஆவார். இவர் அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். இவர் சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.

அக்மார்க் என்றால் என்ன  இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா

இந்த அமேசான் நிறுவனத்தின் லோகோவிற்கு பின் ஒரு கதை உள்ளது. இதற்கான பெயரை அவர் எப்படி வைத்தார் என்று உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடைய லோகோவை மிகவும் பாசிட்டிவாக வடிவமைத்துள்ளார். அது எப்படி தெரியுமா..?  உலகத்திலேயே மிக பெரிய நதி அமேசான் நதி  ஆகும். அதுபோல் தான் தன்னுடைய நிறுவனமும் என்று அமேசான் என்று பெயரிட்டார் ஜெப் பெசோஸ்.  

 amazon name history in tamil

அதேபோல் தன்னுடைய நிறுவனத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். அதாவது A TO Z வரை பொருட்கள் கிடைக்கும் என்பதற்கு குறியீடாக தான் அமேசான் என்ற லோகோவிற்கு கீழ் A -விற்கும் Z -க்கும் இடையில் ஒரு சிரிக்கின்ற குறீயீடு உள்ளது. அதேபோல் நிறுவனத்தில் மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கலாம் என்பதற்கான குறியீடு ஆகும்.

உன்னால் முடிந்தால் கண்டுபிடி  இந்த படத்தில் இருக்கும் ஜெரிப்பழத்தை

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement