Child Lock Button In Car Door in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அதுபோல சிலருக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அப்படி இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது கார் வாங்குவது தான்.
அதுபோல தற்போதைய ஆய்வின் படி இந்தியாவில் கார்கள் அதிகமாக விற்பனை செய்வதாக நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே பலரும் கார் வைத்திருக்கின்றன. அப்படி கார் வைத்திருக்கும் எத்தனை பேருக்கு கார் கதவில் இந்த பட்டன் இருக்கிறது தெரியும். அப்படி இந்த சிறிய பட்டனை பார்த்திருந்தால், அது ஏன் கார் கதவில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கார் கதவில் இந்த சின்ன பட்டன் ஏன் இருக்கிறது..?
இன்றைய நிலையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதால் போட்டிப் போட்டுக்கொண்டு பாதுகாப்பு அம்சங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது Airbags, ABS, reverse parking sensor அல்லது camera போன்ற அம்சங்கள் பெரும்பாலான கார்களில் இருக்கிறது. அப்படி இருக்கும் ஒரு சிறப்பு அம்சம் தான் சைல்டு லாக் (Child Lock) அம்சம்.
ஸ்மார்ட் போனில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
இந்த Child Lock அம்சம் பெரும்பாலான கார்களில் இருக்கிறது. ஆனால் இந்த Child Lock ஆக்டிவேட் செய்யும் பட்டன் டிரைவர் கேபின் பகுதியிலேயே இருக்கும். மற்ற கதவு பகுதியில் இருக்காது.
இந்த பட்டன் எதற்கு..?
பொதுவாக நாம் குழந்தைகளை காரின் பின் சீட்டில் அமர வைத்து தான் அழைத்து செல்வோம். அப்படி கார் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது Central lock
ஆக்டிவேட் ஆகிவிடும். இதனால் குழந்தைகளால் காரின் கதவுகளைத் திறக்க முடியாது.
அதேசமயம் நாம் போன் பேசுவதற்காகக் காரை ஓரமாக நிறுத்திவிட்டு போன் பேசும் போதும் Central lock அன்லாக் ஆகிவிடும். இதனால் பின் சீட்டில் இருக்கும் குழந்தைகளால் காரின் கதவை திறக்க முடியும்.
காரில் இது எதுக்கு இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
இதன் காரணமாக குழந்தைகள் பெரியவர்களுக்குத் தெரியாமல் காரிலிருந்து இறங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் இந்த Child Lock பயன்படுகிறது.
குழந்தைகளை காரில் அழைத்து செல்லும் போது, கார் கதவை அடைக்கும் முன்பு நீங்கள் இந்த Child Lock -கை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இப்படி காரின் கதவை அடைத்துவிட்டால், நீங்களாகக் கீழே இறங்கி பின்பக்க கதவை வெளிப்புறமாகத் திறக்கும் வரை காருக்குள் உள்ள குழந்தைகளால் காரின் கதவுகளைத் திறக்க முடியாது.
இதற்காக தான் இந்த சைல்டு லாக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த சைல்டு லாக்கின் முக்கியமான அம்சமாகும்.
கேஸ் சிலிண்டருக்கு அடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கிறது தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |