வாசனை திரவியம் பயன்படுத்தினால் ஏன் தலைவலி வருகிறது தெரியுமா..?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவு நம்மில் சிலருக்கு உதவியாக இருக்கும். இந்த பதிவு பாதி நபர்களுக்கு எழுந்திருந்த கேள்வியாக இருக்கும்..! அப்படி என்ன கேள்வி என்று யோசிப்பது புரிகிறது. அது என்னவென்றால் உங்களில் யாருக்கு வாசனை திரவியம் (Perfume) பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா..?
சிலருக்கு வாசனை திரவியம் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. இது எதனால் இப்படி, ஏன் பிடிக்காது என்றால் அதனை பயன்படுத்துவதால் தலை வலி வரும். ஆனால் ஒரு சிலருக்கு வராது. இது எதனால் வருகிறது தெரியுமா..? அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.
How to Get Rid of A Headache Caused By Perfume:
பொதுவாக நாம் வாசனை திரவியம் பயன்படுத்தும் போது தலை வலிக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் மனிதனின் மண்டைக்குள் சைனஸ் என்று துவாரங்கள் இருக்கும். அந்த துவாரங்களை சுற்றி மூளைக்கு செல்ல கூடிய சில நரம்புகள் சதையுடன் படர்ந்து இருக்கும்.
ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா
இந்த துவாரங்களை வெற்றிடமாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் அந்த துவாரங்களை சுற்றி தூசி, சளி ஒவ்வாமை தரக்கூடிய காற்று மற்றும் சில காற்றுகள் சென்று அடைக்கும் போது உள் இருக்கும் தசைக்கும், நரம்புகளுக்கும் அழுத்தம் ஏற்படும்.
இந்த துவாரங்கள் மூளைக்கு மிக பக்கத்தில் இருப்பதாலும், மூளைக்கு செல்ல கூடிய நரம்புகள் இதனை சுற்றி இருப்பதால் நம்முடைய மூளைக்கு அழுத்தம் ஏற்படும். உடனே மூளையும் ஏதோ நம்மை தாக்குவதற்கு வந்துள்ளது என்று நினைத்து மூளையை சுற்றி உள்ள நரம்புகளுக்கு அறிகுறியை அனுப்பும். உடனே நரம்புகள் அனைத்தும் வலியை ஏற்படுத்தும். இதனால் தான் வாசனை திரவியத்தை நுகர்ந்து பார்த்தால் தலைவலி ஏற்படுகிறது.
சூரியனை பார்த்தால் யாருக்கு தும்மல் வரும் அது எதனால் வருகிறது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |