Does Eating Okra Food Improve Maths in Tamil
ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா..? பலரும் பிடிக்காது என்று சொல்வீர்கள். அதற்கு காரணம் வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை தான். சரி இதற்கு காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 வெண்டைக்காய் வழவழப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வெண்டைக்காய் சாப்பிட்டால் Maths நன்றாக வரும் என்று சொல்வது உண்மையா..?
வெண்டைக்காயின் வழவழப்பு தன்மைக்கு என்ன காரணம் என்று மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி பொதுவாக நாம் படிக்கும் போதிலிருந்தே நம் வீட்டில் இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிடு மூளை நன்றாக வளரும், கணக்கு சூப்பராக வரும் என்று சொல்வார்கள். சரி நீங்களும் இதுபோல சொல்லி கேட்டிருக்கிறீர்களா..?
பொதுவாக நம் வகுப்பறையில் யாராவது கணிதத்தில் சிறந்து விளங்கினால் உடனே அவரிடம் நீங்கள் வெண்டைக்காய் அதிகமாக சாப்பிடுவீர்களா என்று கேட்போம். ஆனால் ஏன் இப்படி சொல்கிறார்கள். உண்மையில் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வருமா என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா |
வெண்டைக்காய் வழவழப்பு தன்மை கொண்ட ஒரு காய் என்று நமக்கு தெரியும். அதனால் தான் குழந்தைகளும் சரி மற்றவர்களும் சரி வெண்டைக்காயை சாப்பிட மறுக்கிறார்கள்.
ஆனால் வெண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அது இரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. அதேபோல கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு நோய், வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்தாக வெண்டைக்காய் பயன்படுகிறது.
அதுபோல முக்கியமான விஷயம் என்னவென்றால் வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் அறிவு வளர்ச்சியை உண்டாக்கும். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
வெண்டைக்காயில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று நாம் குழந்தைகளிடம் சொன்னால் அவர்கள் கேட்கமாட்டார்கள். அதுபோல பாடங்களில் கஷ்டமாக இருக்கும் பாடம் என்றால் அது கணக்கு பாடம் தான். அதனால் தான் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று சொல்லி சாப்பிட வைத்தார்கள்.
தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா.. இது உண்மையா.. பொய்யா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |