புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது தெரியுமா..? கடைசியில் கொண்டாடும் நாடு எது..!

Advertisement

எந்த நாடு முதலில் புத்தாண்டு கொண்டாடுகிறது | First Celebration New Year Country in Tamil 

நண்பர்களே அனைவருக்கும் அன்பு வணக்கம்..! உங்களில் யாருக்கு தெரியும்..! புத்தாண்டு முதலில் கொண்டாடும் நாடு எது என்று..? நீங்கள் நினைப்பீர்கள் அனைத்து நாடுகளிலும் ஒரு நேரத்தில் தான் புத்தாண்டை கொண்டாடுவார்கள் என்று. ஆனால் அப்படி இல்லை. சில நாடுகளில் புத்தாண்டை முதலில் கொண்டாடுவார்கள்.  அதேபோல் நம்மை விட கடைசியில் கொண்டாடும் நாடும் உள்ளது..! அது எந்த நாடு என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

First Celebration New Year Country in Tamil:

அனைவருமே புத்தாண்டுகளை ஒன்றாக வரவேற்க மாட்டோம். முதலில் வரவேற்கும் நாடுகள் உள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க..! அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களும் மாறுபடும். பூமியில் மொத்தமாக 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அதை விடச் சற்று கூடுதலாகவே இருக்கும்.

முதலில் எந்த நாடு கொண்டாப்படுகிறது:

முதலில் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் தான் புத்தாண்டை முதலில் கொண்டாட உள்ளன. கிரிமதி தீவு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் தான் முதலில் புத்தாண்டு வருகிறது. அதாவது இந்தியாவின் நேர படி பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கிறது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா

கடைசியாக கொண்டாடபடும் நாடு எது:

புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் பகுதி என்று பார்த்தால் அது தென் பசிபிக் பகுதியில் உள்ள நியு மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகள் ஆகும். இதற்கு பிறகு இருக்கும் பேக்கர் தீவு மற்றும் ஹவ்லேண்ட் தீவில் பிறகு தான் புத்தாண்டு வரும் என்றாலும் கூட இந்த இரண்டிலும் மக்கள் யாரும் இல்லை. அதாவது இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு அந்த நாட்டில் புத்தாண்டு பிறக்கும்.

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா இது தெரியாம போச்சே

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement