தீப்பெட்டி ஏன் 2 ரூபாய்க்கு விற்கிறார்கள் தெரியுமா..?

History of Matchbox in Tamil

History of Matchbox in Tamil

நண்பர்களே உங்கள் வீட்டில் நெருப்பு உருவாவதற்கு என்ன செய்வீர்கள். முதலில்  நெருப்பு உருவாக்குவதற்கு தீ பெட்டியை வாங்குவீர்கள்..! அதன் பின்பு மிகவும் எளிமையாக நெருப்பை வர வைத்து அதில் சமைத்துக் கொள்வோம் அல்லவா..? சரி எப்போதாவது யோசித்து உண்டா ஏன் இந்த தீப்பெட்டி இவ்வளவு சின்னதாகவும் குறைவான விலையிலும் விற்கிறது என்று. அதேபோல் இந்த இவ்வளவு சின்னதாக உள்ள தீப்பெட்டியில் எப்படி நெருப்பு வருகிறது என்றும் இதை யார் கண்டுபிடித்து இருப்பார்கள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

History of Matchbox in Tamil:

History of Matchbox in Tamil

தீப்பெட்டியை 2 ரூபாய்க்கு விற்க காரணம் யாரோ ஒருவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தீப்பெட்டி உருவான கதை என்ன தெரியுமா..?

Hennig Brandt என்ற விஞ்ஞானி எதிர்பார்க்காமல் பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு கெமிக்கலை கண்டுபிடிகிறார். உடனே அவர் இரும்பை தங்கமாக மாற்றும் கெமிக்கலை கண்டிபிடித்துவிட்டோம் என்று நினைக்கிறார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த கெமிக்கல் வரவில்லை. அது பயன்படாமல் போய்விட்டது.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்த கெமிக்கல் உருவாக்கிய செய்முறையை விற்கிறார். அது தான் இந்த வெள்ளை பாஸ்பரஸ் (White Phosphorus) ஆகும். இந்த பாஸ்பரஸ் விரையில் நெருப்பை உருவாக்கும்.

மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா 

இதனை தெரிந்துகொண்ட John Walker இதை பயன்படுத்தி பெரிய வெடி மருந்து தயாரிக்கலாம் என்று இந்த வெள்ளை பாஸ்பரஸ்யுடன் பல கெமிக்கலை கலந்து தயாரிக்கிறார். அவருக்கும் ஏமாற்றம் தான் கிடைத்தது. அவர் கலந்து வைத்த கெமிக்கல் கட்டி புடித்துவிட்டது.

அந்த கெமிக்கலை உடைப்பதற்காக அதனை இன்னொரு இடத்தில் வைத்து உடைக்க முயல்கிறார். அப்போது அதிலிருந்து ஒரு நெருப்பு வந்தது. உடனே இதை வைத்து ஒரு தீப்பெட்டியை கண்டுபிடிக்கிறார். இதற்கு காப்பு உரிமை வாங்காமல் அதை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். உடனே இதை வைத்து இப்போ இருக்கிற இந்த தீப்பெட்டியை தயாரித்து உள்ளார்கள்.

ஆகவே இதை 2 ரூபாய்க்கு விற்க வெள்ளை பாஸ்பரஸ் எதிர்பாராமல் கண்டுபிடித்த Hennig Brandt -ம், தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமையை வாங்காமல் விட்ட John Walker இவர்கள் தான் இந்த தீப்பெட்டி 2 ரூபாய்க்கு விற்க காரணம்.

இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking