மொபைல் போனில்
இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் சார்ஜ் செய்யும் இடத்திற்கு பக்கத்தில் சிறிய ஓட்டை இருக்கும். அது எதற்காக இருக்கிறது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
மொபைல் போனில் இருக்கும் சிறிய ஓட்டை எதற்காக இருக்கிறது:
மொபைல் போனில் அடிப்பகுதியில் அதாவது சார்ஜ் செய்யும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும், சிறிய ஓட்டை எதற்காக இருக்கிறது என்று யோசித்திருந்தீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நாம் போன் பேசும் போது மற்றவருக்கு தெளிவாக கேட்க செய்யும் மைக்ரோ போன் என்று சொல்லலாம். இவை நாம் போன் பேசும் போது இயங்குகிறது. இதன் ஓட்டை சிறியதாக இருப்பதால் பேசும் வார்த்தைகளை தெளிவாக கேட்பதற்கு உதவுகிறது. அதே போல் நம்மை சுற்றிலும் சத்தம் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக கேட்பதற்கு உதவுகிறது.போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?
மொபைல் போனில் இருக்கும் ஓட்டை எதற்காக கொடுப்பட்டிருக்கிறது, எவ்வளவு முக்கியம் என்றும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதனால் நீங்கள் பேசும் போது மற்றவர்களுக்கு சரியாக கேட்கவில்லை என்றால் ஒன்று டவர் பிரச்சனையாக இருக்கும், இல்லையென்றால் சிறிய ஓட்டையில் ஏதவது தூசி இருந்தாலும் சரியாக கேட்காது.
நம்மை அறியாமல் நாம் போன் பேசும் போது மற்றவர்களுக்கு சரியாக கேட்கவில்லை என்றால் கீழ் பகுதியில் இருக்கும் ஓட்டையின் பக்கத்தில் வாயை வைத்து பேசுவோம் அல்லவா.! ஏன் வாயை கீழே வைத்து பேசுகிறோம் என்று இப்போ தெரிகிறதா.! இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
SIM கார்டு எப்படி Work ஆகிறது..? SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |