தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..? உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How Did The Water Get Into The Coconut in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..? என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். அது எப்படி தேங்காய் உள்ளே தண்ணீர் வந்திருக்கும் என்று நாம் பலமாக யோசித்திருப்போம். ஆகவே அந்த யோசனைக்கு தீர்வு தரும் பதிவாக இந்த பதிவு இருக்கும். ஓகே வாங்க பிரண்ட்ஸ் தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது என்று படித்தறிவோம்.

தேங்காய் வேஸ்ட் ஆனால் இனிமேல் தூக்கிப் போடாதீங்க.. அதையும் இப்படி பயன்படுத்தலாம்

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..?

How Did The Water Get Into The Coconut

பொதுவாக நாம் அனைவருமே இளநீர் குடித்திருப்போம். அவ்வளவு ஏன் நம்மில் பலரின் வீடுகளிலும் தென்னைமரம் என்பது கண்டிப்பாக இருக்கும். தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய், தென்னமட்டை, தேங்காய் ஓடு, தேங்காய் நார் என்று ஒவ்வொரு பொருட்களும் நமக்கு பல விதங்களில் பயன்படுகிறது.

நாமும் சிறுவயதில் இருந்தே இந்த இளநீர்க்குள் தண்ணீர் எப்படி வந்தது என்று யோசித்திருப்போம். இளநீராக இருந்தாலும் சரி, தேங்காயாக இருந்தாலும் சரி அதில் பல நன்மைகள் இருக்கிறது.

ஆனால் தேங்காய் உள்ளே தண்ணீர் எப்படி வந்தது..? வாங்க தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மரம், செடி கொடிகள் எல்லாமே தண்ணீரின் உதவியுடன் தான் வளர்கிறது. அதேபோல தென்னைமரமும் தண்ணீரால் தான் வளர்கிறது.

குளிரான பொருட்கள் மீது ஏன் நீர் தோன்றுகிறது தெரியுமா..

அப்படி தென்னைமரமானது அது இருக்கும் நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீரை வேரின் மூலம் நேராக இளநீருக்கு அனுப்புகிறது. அப்படி வேரின் மூலம் அனுப்பப்படும் தண்ணீரானது Endosperm என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு திசு என்றும் அழைக்கப்படுகிறது. 

Endosperm என்பது தேங்காயின் வளர்ச்சிக்கு பல சத்துக்களை தருகிறது. இதில் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள் மற்றும் லிப்பிடுகள் நிறைந்து காணப்படுகின்றன. 

இப்படி அனுப்பப்படும் தண்ணீர் தான் உள்ளே இருக்கும் தேங்காயின் வளர்ச்சிக்கு உணவாகவும், ஊட்டசத்தாகவும் இருக்கிறது. 

அப்படி தேங்காயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தண்ணீரை தான் நாம் இளநீராக குடித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இப்போது தெரிந்து கொண்டீர்களா..? தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது என்று.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள Pothunalam.com தளத்தை பார்வையிடவும். 

Advertisement