How The QR Code Was Created
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் மூலம் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..! அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும். சரி நாம் அனைவருமே இன்றைய நிலையில் QR Code மூலம் பணபரிவர்த்தனைகளை செய்து வருகின்றோம். ஆனால் நம்மில் பலருக்கும் QR Code பற்றிய தகவல் அவ்வளவாக தெரியாது. அதனால் இன்றைய பதிவில் நாம் QR Code உருவான விதத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
QR Code உருவான வரலாறு:

QR குறியீடு என்பது முழு விரைவு மறுமொழிக் குறியீடு என்று சொல்லப்படுகிறது. அதாவது QR குறியீடு என்பது ஒரு வகை மேட்ரிக்ஸ் பார்கோடு அல்லது இரு பரிமாண பார்கோடு ஆகும்.
இந்த QR குறியீடு கணினி அமைப்பில் ஸ்கேன் செய்யக்கூடிய தரவை, குறியாக்கம் செய்யும் சிறிய கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களின் அச்சிடப்பட்ட சதுர வடிவத்தைக் கொண்ட ஒரு வகை பட்டை குறியீடு ஆகும்.
ATM கார்டில் இந்த சிப் ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா
இந்த QR Code 1994 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான டென்சோ வேவ் என்ற நிறுவனத்தில் இருந்து மசாஹிரோ ஹராவால் என்பவரால் QR குறியீடு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம் ஆகும்.
QR Code பயன்படும் விதம்:

QR Code 1994 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனத்தின் வாகன பாகங்களுக்கான லேபிள்களாகப் பயன்படுத்தப்பட்டது. அதாவது டென்சோவால் தயாரிக்கப்பட்ட வாகன பாகங்களை கண்காணிப்பது, ஒவ்வொரு பெட்டியிலும் பல பார் குறியீடுகளை மாற்றுவது, ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஸ்கேன் செய்வது போன்ற பயன்பாடுகளுக்காக QR Code பயன்படுத்தப்பட்டது.
| SIM கார்டு எப்படி Work ஆகிறது SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா |
பின் கூப்பன் அல்லது தயாரிப்பு பற்றிய தகவலைக் கொண்ட இணைய தளத்தின் URL -ஐ குறியாக்க QR குறியீடுகள் பெரும்பாலும் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது QR குறியீடுகள் வணிக கண்காணிப்பு பயன்பாடுகள் மற்றும் மொபைல் ஃபோன் பயனர்களை இலக்காகக் கொண்ட வசதி சார்ந்த பயன்பாடுகள் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த QR குறியீட்டின் மூன்று மூலைகளிலும் ஃபைண்டர் பேட்டர்ன் உள்ளது. இது ஒரு ஆப்டிகல் ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டு, மென்பொருளால் விளக்கப்படும் போது, ஸ்கேனிங் சாதனம் QR குறியீட்டின் நோக்குநிலையைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இப்படி தான் QR Code பயன்படுகிறது.
| போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா |
| மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |














