Maximum Age Difference For Marriage in Tamil
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். திருமணம் பேச்சு ஏற்பட்டதும் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் மாற்றி மாற்றி வீட்டுக்கு செல்வார்கள். பெரியவர்கள் வீட்டை கட்டி பார் திருமணத்தை பண்ணி பார் என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு திருமணம் பேச்சு எடுத்ததும் ஜாதகம் பார்ப்பார்கள் அதன் பிறகு ஜாதகம் சரியாக இருந்தால் தான் திருமண பேச்சை எடுப்பார்கள். இதற்கு முன்னடி மாப்பிள்ளை மற்றும் பெண்ணிற்க்கு வயது வித்தியாசத்தை பார்ப்பது அவசியமானது. அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் கணவன், மனைவி எவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யலாமா.? | How Many Years Age Gap is Good for Marriage:
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது தப்பில்லை. ஆனால் இவை இவை இரண்டும் உங்கள் இருவரும் பேச கூடிய விஷயமாக இருக்கிறது. இருவருக்கிடையே அன்பு, காதல், மரியாதை போன்றவை இருந்தால் தான் திருமண வாழ்க்கையை வளமை ஆக்கும்.
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இருவருக்கிடையே 3 முதல் 5 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பது நல்லது. ஏனென்றால் இப்படி இருப்பதன் மூலம் தான் ஒரே மாதிரியான மன நிலையும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்.
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் 15 வயது வித்தியாசம் என்றால் உங்களுடைய மனநிலையும், அவருடைய மன நிலையும் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஒருவரைக்கொருவர் புரிந்து கொள்ள முடியாது. மோதல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
வயது வித்தியாசம்:
0 முதல் 5 ஆண்டுகள்:
0 முதல் 5 வருடத்திற்குள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் இருவருக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் இருக்கும்.
5 முதல் 7 ஆண்டுகள்:
5 முதல் 7 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டால் இருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
8 முதல் 15 ஆண்டுகள்:
8 முதல் 15 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டால் இருவருக்கும் வெவ்வேறு விதமாக யோசிப்பார்கள், மேலும் விருப்பங்களும் மாறுபடும்.
பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா..?
15 ஆண்டுகளுக்கு மேல்:
15 வயது மேல் வித்தியாசம் உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இருவருக்கும் புரிதல் இருக்காது.
எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தால் திருமணம் செய்யலாம்:
குறைந்தது மூன்று வருடம் முதல் அதிகபட்சம் 5 வருட இடைவெளியில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்.
மிக அதிகபட்சம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு ஏழு வருட வித்தியாசம் வைத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக 30 வயது ஆணுக்கு திருமணம் செய்ய 23 வயதுக்கு கீழே இருக்கும் பெண்களை திருமணம் செய்து வைக்க கூடாது. எனவே தம்பதிகள் இருவருக்குமான வயது வித்தியாசம் 3 முதல் 7 வருடங்களுக்குள் இருக்கலாம்.அதிக வயது வித்தியாசம் திருமணம் செய்தால் சந்திக்க கூடிய பிரச்சனை
அதிக வயது வித்தியாசம் என்று சொல்லப்படும் வயது எது:
பொதுவாக கணவன் மனைவி இடையே அதிக வயது வித்தியசம் என்று சொல்லப்படுவது குறைந்து 10 ஆண்டுகள் மேல் இருப்பதை அதிக வயது வித்தியாச திருமணம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
சமூகம் ஏற்காது:
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு சென்று உங்களை மற்றவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளும் போது, எதிரில் நிற்கும் நபர் குறைந்தது 2 நிமிடம் அமைதி காப்பது உண்டு. காரணம் இந்த தம்பதியர்களை கணவன் மனைவியாக அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மனம் வருவதில்லை.
குட்டவளியாகும் வயது:
அதிக வயது வித்தியாசத்தில் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் போது, அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும், இவர்களின் வயது மீது பழி சுமத்தப்படும் அதாவது, தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படலாம், அப்படி தாமதம் ஆகும் போது இந்த வயது வித்தியாசத்தின் மீது தான் சமூகம் பழி போடும்.
கருத்து வேறுபாடுகள் வளரும்:
சமூகத்தை தவிர்த்து சொத்தை வீட்டிலேயே கணவன் மனைவி இடையே நிறைய மன கசப்புகள் எழலாம். வெவ்வேறு தசாப்தங்களை சேர்ந்த இவர்கள் இருவரின் விருப்ப வெறுப்புகளில் உள்ள மாற்றம், இவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டிற்கு வெளிவாக்குகிறது.
குழந்தை பெறுவதில் குழப்பம்:
அதிகவயது வித்தியாச தம்பதியில் மனைவி அதிக வயது கொண்டவராக இருந்தால் அவரால் ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்க முடியுமா? முடியாதா? என்ற கொல்வி முதலில் எழும். இந்த குழப்பம் சில சமயம், குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு தூண்டும்.
விருப்பமற்ற கடமைகள்:
முதல் மனைவி இருந்து பின், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் தங்களை விட மிகவும் குறைவான வயது கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டால் முதல் மனைவி வழி குழந்தை இருப்பின், இந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது 2-வது மனைவியின் விருப்பமற்ற கடமையாக மாறிவிடுகிறது.
உடலுறவில் சிக்கல்:
வித்தியாசம் வயதில் மட்டும் இல்லாமல் இரசனையிலும் தான் எனவே உடலுறவின் போது ஒருவரின் விருப்பத்திற்கு மற்றொருவர் விட்டு கொடுப்பதில் பல சிக்கல்கள் எழலாம். அதே போல் இருவரது உடல் வாகும் இங்கு குறிப்பிடத்தக்க சில பிரச்சனைகளுக்கு காரணமாகலாம்.
முன்னுரிமை பிரச்சனைகள்:
அதிக வயது வித்தியாச தம்பதியில் பெரியவராக இருக்கும் நபர், பணி, பணம், குடும்ப நலன் என பெருபாலும் பெருக்க இருக்க முயற்சி செய்வார்கள். அதேபோல் வயதில் சிறியவர்கள் தங்கள் துணையின் பொறுப்பை புரிந்துகொள்ள இயலாமல் தவிப்பர்.
விரைவில் தனிமை:
அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதியில் பெரியவராக இருக்கும் நபர், தன் துணையை தனிமையில் விட்டு விரைவில் இறக்க நேரிடலாம், அதாவது இருவரும் இணைந்து வாழ்வதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
பெண்ணிற்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்தால் இந்த தண்டனை தான் .!
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |