Name Of The Part Between The Nose And The Lip in Tamil
நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி கூறி வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக மனித உடலில் இருக்கும் பாகங்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு பெயர் இருக்கும். அப்படி இருக்கும் அனைத்து பெயர்களுமே ஓரளவுக்கு தெரியும்.
ஆனால் நம்மில் பாதி பேருக்கு இந்த உறுப்பின் பெயர் மட்டும் தெரியாது. அதாவது உதட்டிற்கும் மூக்கிற்கும் இடையில் இருக்கும் குழி போன்ற உறுப்பிற்கு என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா..? இதற்கான விடை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல், இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கேள்வியும் இது தான். ஆகவே அதற்கான விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஆங்கிலத்தில் NUMBER என்பதை சுருக்கி ஏன் No என்று எழுதுகிறோம் தெரியுமா.. இதனால் தான்..
மூக்கிற்கு கீழ் இருக்கும் குழிக்கு பெயர் என்ன தெரியுமா..?
பொதுவாக மனிதனின் உடலில் எவ்வளவோ உறுப்புகள், நரம்புகள் மற்றும் எலும்புகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு பெயர் கண்டிப்பாக இருக்கும்.
உதாரணத்திற்கு கை கால்களை எடுத்து கொண்டால் அதில், விரல்கள், மணிக்கட்டு, நகங்கள், பாதம், முட்டி என்று ஒவ்வொரு பெயர்களை சொல்லலாம்.
அதுபோல முகம் என்று எடுத்து கொண்டால் கண், மூக்கு, வாய், பல், காது, கன்னம், நெற்றி, புருவம், இமை, உதடு என்று சொல்லலாம். ஆனால் நம் முகத்தில் இருக்கும் இந்த உறுப்பிற்கு பெயர் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது என்ன உறுப்பு என்று யோசிக்கிறீர்களா..? அட நம்முடைய மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே இருக்கும் பள்ளத்தை தான் சொல்கிறேன்.
ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை.. காரணம் தெரியுமா..
இப்படி மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே இருக்கும் பள்ளத்திற்கு என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தற்போது காண்போம்.
பொதுவாக மூக்கிற்கு கீழ் ஒரு குழிபோன்ற அமைப்பு இருக்கும். அந்த குழிபோன்ற அமைப்பிற்கு ஆங்கிலத்தில் ஃபில்ட்ரம் (Philtrum) என்று சொல்லப்படுகிறது.
அதாவது Philtrum என்பது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே இருக்கும் குழி போன்ற உறுப்பின் பெயராகும்.
இந்த Philtrum என்ற பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து வந்த பெயர் என்று சொல்லப்படுகிறது. இந்த Philtrum என்ற வார்த்தைக்கு தமிழில் இடைநிலை பிளவு என்று அர்த்தமாகும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |