பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பொதுவாக நாம் புதிதாக எழுத ஆரம்பித்தால் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிப்போம். இதற்கான காரணம் என்னவாகி இருக்கும் என்று என்றாவது யோசித்திருக்கீர்களா.! நம் முன்னோர்கள் எந்த செயலையும் காரணம் இல்லாமல் செய்ய சொல்ல மாட்டார்கள். அதனால் இன்றைய பதிவில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதற்கான காரணம்:
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதற்கு காரணம் நம் ஆரம்பிக்கும் செயலானது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல விதமாகவும், வெற்றியை தர வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். இந்த வேதமானது ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது.
நமது வாழ்வில் செய்த காரியம் , செய்ய போகின்ற காரியம் அனைத்திற்கும் தலைவனாக இருப்பது விநாயகர் தான். அதனால் தான் நாம் ஆரம்பிக்கும் செயலை எந்த பிரச்சனையம் இல்லாமல் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம்.
உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும். உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறோம்.
மனித முகம் கொண்ட பிள்ளையார் கோவில் எங்குள்ளது?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |