லாரிகளுக்கு பின்னால் NP – AIP என்று எழுதியிருக்க காரணம் என்ன தெரியுமா..?

Reason For Writing NP And AIP Behind The Trucks in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் காணப் போகின்றோம். பொதுவாக நாம் எங்காவது வெளியில் செல்லும் போது ஏதாவது ஒரு படத்தையோ அல்லது ஏதோ ஒரு விஷயத்தையோ பார்த்திருப்போம். அப்படி பார்க்கும் போது அது ஏன் இப்படி இருக்கிறது என்று நமக்குள் ஒரு கேள்வி எழும். உதாரணத்திற்கு ரயிலின் பின் புறத்தில் × என்ற குறியீடு இருக்கும். ஏன் இந்த குறியீடு இருக்கிறது என்று நம் அனைவருக்குமே ஒரு கேள்வி இருக்கும். அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா

ரயிலின் பின் புறத்தில் × என்ற குறியீடு ஏன் இருக்கிறது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதுபோல தான் இந்த பதிவில் லாரிகளுக்கு பின் NP மற்றும் AIP என்று எழுதியிருக்க காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

லாரிகளுக்கு பின் NP – AIP என்று எழுதியிருக்க காரணம் என்ன..?  

what is the reason for writing np and aip behind the trucks

பொதுவாக நாம் அனைவருமே தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். அதுபோல நாம் சாலையில் செல்லும் போது லாரிகளை பார்த்து வருகிறோம். நாம் தினமும் ஏதாவது ஒரு லாரியையாவது பார்த்திருப்போம் அல்லவா..!

அப்படி லாரிகளை பார்க்கும் போது அதற்கு பின்னால் NP மற்றும் AIP என்று எழுதப்பட்டிருக்கும். இதை நீங்கள் என்றாவது கவனித்திருக்கிறீர்களா..? அப்படி பார்த்திருந்தால் அதற்கான காரணத்தை நீங்கள் யோசித்திருப்பீர்கள். அதை இங்கு காணலாம்.

ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா

பெரும்பாலும் நாம் அனைவருமே இதை ஏதோ நிறுவனத்தின் பெயர் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இது வாகனம் எங்கெல்லாம் செல்லலாம் என்று அனுமதிக்கும் வார்த்தையாகும்.

what is the reason for writing np and aip behind the trucks

லாரி போன்ற வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் பெர்மிட் வாங்க வேண்டும். அதற்காக பணம் செலுத்தவேண்டும். லாரி போன்ற வாகனங்கள் பொதுவாக மாநிலத்திற்குள் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.

பொதுவாக லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் லாரிகள் பெர்மிட் வாங்குவது என்பது கடினமான விஷயம் ஆகும். அதன் காரணமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மொத்தமாக பெர்மிட்களை எடுத்துக்கொள்ள வழங்கப்படும் வாய்ப்பு தான் AIP மற்றும் NP ஆகும்.

அதாவது AIP என்பது All India Permit மற்றும் NP என்பது National Permit என்று சொல்லப்படுகிறது.

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா

All India Permit in Tamil:

இது பஸ், கார், டிரக் போன்ற வாகனங்களுக்குப் பெறும் உரிமம் ஆகும். ஒரு முறை இந்த பெர்மிட்டை வாங்கிவிட்டால் அது 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த AIP என்பதை பெற்றுவிட்டால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும், எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதுபோல ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பெர்மிட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

National Permit in Tamil:

இது All India Permit –ன் ஒரு துணை பிரிவாகும். National Permit என்பது பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைச் சுற்றியுள்ள 4 மாநிலங்களுக்கு மட்டுமே சென்று வர அனுமதி வழங்கப்படும். அதன் காரணமாக பக்கத்து மாநிலத்திற்கு மட்டும் சென்று வரும் வாகனங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது பஸ்களுக்கு வழங்கப்படமாட்டாது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking