What Causes Henna To Turn Red in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அது என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதாவது மருதாணி போட்டால் கைகள் சிவக்க காரணம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதற்கு முன் உங்களுக்கு மருதாணி போடுவது பிடிக்குமா..? பிடிக்கும் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மருதாணி போட்டால் கைகள் சிவக்க காரணம் என்ன..?
நம் அனைவருக்குமே மருதாணி வைத்து கொள்ள மிகவும் பிடிக்கும். நம் கைகளில் வைக்கும் மருதாணி கொஞ்சம் நேரம் கழித்து கைகள் சிவந்து பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.
ஆனால் மருதாணி எப்படி சிவக்கிறது என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அந்த காரணத்தை நான் கூறப்போகிறேன். எனவே அந்த காரணத்தை படித்து பயன்பெறுங்கள்.
பறவைகள் எப்படி பறக்கிறது.. அதற்கு காரணம் என்ன தெரியுமா
பொதுவாக மருதாணி இலைகளில் காணப்படும் (Lawsonia Inermis) என்ற லாசோன் மூலக்கூறு இருக்கிறது. இந்த லாசோன் ஒரு வண்ணமயமான நிறமி என்றும் சொல்லப்படுகிறது. அதாவது மருதாணியின் சிவப்பு நிறம் லாசோன் என்ற மூலக்கூறிலிருந்து வருகிறது.
இந்த லாசோன் என்ற மூலக்கூறு நிறமி வெளியாகி, தோல் செல்களில் உள்ள கெரட்டினுடன் வினைபுரிந்து, சிவப்பு நிற கறையை ஏற்படுத்துகிறது. அதாவது தோலின் வெளிப்புற அடுக்குக்குள் சென்று இடம்பெயர்ந்து நம் தோலில் உள்ள கெரட்டின் புரதத்துடன் பிணைக்கிறது.இதன் காரணமாக தான் நாம் மருதாணி வைக்கும் போது நம் கைகள் சிவப்பு நிறமாக மாறுகிறது. அதேபோல நாம் மருதாணியை வைத்து அகற்றிய சில மணிநேரங்களில் லாசோன் கெரட்டினுடன் தொடர்ந்து வினைபுரிவதால் நிறம் தொடர்ந்து கருமையாக மாறுகிறது.
ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |