What Flower is Saffron Made From in Tamil
வணக்கம் நண்பர்களே. குங்குமப்பூ பற்றி அனைவரும் தெரிந்து இருப்போம். உலகில் உள்ள மிக உயர்ந்த பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று. குங்குமப்பூ பல வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதன் சூப்பரான நறுமணத்தால் பல்வேறு வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே குங்குமப்பூ பல்வேறு வகையில் நமக்கு பயனளிக்கிறது. அப்படிப்பட்ட விலை உயர்ந்த குங்குமப்பூ எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.? அதற்கான பதிலை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். ஓகே வாருங்கள் குங்குமப்பூ எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? ஏன் அதிக விலையில் விற்கப்படுகிறது.? போன்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
What is Saffron Made From in Tamil:
உலகிலேயே மிக விலை உயர்ந்த நறுமண பொருளாக திகழும் குங்குமப்பூ க்ரோகஸ் சாவடிஸ் என்ற தாவர மலரில் இருந்து தான் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. இந்த மலரின் மகரந்தத்தில் உள்ள நார் தான் குங்குமப்பூ எனப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூக்களை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட 1 1/2 லட்சம் க்ரோகஸ் சாவடிஸ் மலர்கள் தேவைப்படுகின்றன.மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.? |
குங்குமப்பூ எப்போது அறிமுகமானது.?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இரானின் சூஃபி முஸ்லிம்கள் தான் குங்குமப்பூவை காஷ்மீருக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
குங்குமப்பூவை வளர்ப்பதற்கு நிலமும் காலமும் சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் பயிரிடப்பட்ட குங்குமப்பூ பூத்து குலுங்குகின்றன.
குங்குமப்பூ சாகுபடி செய்வதற்கு பொறுமையும் கடின உழைப்பும் மிகவும் முக்கியம். இலையுதிர் காலத்தில் குங்குமப்பூ பறிக்கப்பட்டு அதில் உள்ள நார்களை பிரித்தெடுத்து வீட்டு பகுதிகளிலே காயவைக்கிறார்கள். அதாவது பூவின் மகரந்த நார்கள் நன்றாக சுருக்கும் வரை காயவைத்து பிறகு சந்தைக்கு விற்பனை செய்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா..? |
குங்குமப்பூ ஏன் அதிக விலையில் விற்கப்படுகிறது.?
ஒரு மலரில் மூன்று குங்குமப்பூ மட்டுமே பூக்கிறது. எனவே ஒரு கிலோ குங்குமப்பூ தயாரிக்க 1 லட்சத்திற்கும் மேலான மலர்கள் தேவைப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் குங்குமப்பூவில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றையெல்லாம் கணக்கிட்டு தான் குங்குமப்பூ அதிக விலையில் விற்கப்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |