வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரயிலில் மட்டும் ஏன் 2 டிரைவர்கள் இருக்கிறார்கள்..? காரணம் என்ன தெரியுமா..?

Updated On: June 10, 2023 6:21 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

What Is The Reason Why Trains Have 2 Drivers in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு ரயிலில் செல்ல பிடிக்குமா..? இது என்ன கேள்வி யாருக்கு தான் ரயிலில் செல்ல பிடிக்காது சொல்லுங்கள். ரயில் பயணம் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். பஸ்ஸில் செல்வதை விட ரயிலில் செல்வதை தான் அதிக மக்கள் விரும்புகிறார்கள். அதிலும் நீண்ட தூர பயணங்களுக்கு பலரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். காரணம் பஸ் பயணத்தில் இருக்கும் வசதியை விட ரயில் பயணத்தில் நிறைய வசதிகள் இருக்கின்றன. சரி நாம் அனைவருமே ரயிலில் பயணம் செய்திருப்போம். அப்படி பயணம் செய்த எத்தனை பேருக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும். அதாவது ரயிலில் மட்டும் ஏன் 2 டிரைவர்கள் இருக்கிறார்கள்..? 2 ஓட்டுநர்கள் இருக்க என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரயிலில் 2 ஓட்டுனர்கள் இருக்க காரணம் என்ன..? 

this is because trains have 2 drivers

பொதுவாக இந்திய இரயில்வே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பயணிகளை தங்களது ஊருக்கு பாதுகாப்பாக அழைத்து செல்கிறது. அப்படி நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்வது ரயில் ஓட்டுனர்கள் தான்.

என்ன தான் ரயிலில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும், பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறது என்ற பெருமை ரயில் ஓட்டுநர்களையே சேரும். அப்படி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலை ஓட்டும் ஓட்டுநர்கள் லோகோ பைலட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா

அதுபோல ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 2 டிரைவர்கள் இருப்பார்கள். அவர்கள் தலைமை லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் என்று அழைக்கப்படுகிறார்கள். 

ஆனால் இந்த 2 டிரைவர்கள் மட்டும் ரயிலை ஆரம்பம் முதல் இறுதி வரை இயக்குவதில்லை என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

ரயில் டிரைவர்கள் மாற்றப்படுவார்களா..? 

this is because trains have 2 drivers

காரணம் நாம் ஏதாவது ஊருக்கு சென்றால் என்ன செய்வோம். பைக்கில் செல்வோம் அல்லது கார் இருந்தால் காரில் செல்வோம். அப்படி நாம் காரிலோ அல்லது பைக்கிலோ 2 மணிநேரம் பயணித்தால் முதுகுவலி, கால்வலி, உடம்பு வலி என்று வந்துவிடுகிறது.

அதற்காக தான் நீண்ட தூரம் செல்லும் ரயிலை ஓட்டுவதற்கு 2 டிரைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு ரயிலை அந்த 2 டிரைவர்கள் மட்டும் தான் ஓட்டுவார்கள் என்று சொல்லமுடியாது.

ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா

நூறு கிலோமீட்டர்கள் போகும் ரயிலை எப்படி இருவர் மட்டும் ஓட்டிக்கொண்டு போக முடியும் சொல்லுங்கள். அதற்காக தான் இடையில் ரயில் டிரைவர்கள்  மாற்றப்படுகின்றனர்.

2 டிரைவர்கள் மட்டும் தொடர்ந்து ரயிலை இயக்கிச் சென்றால் சோர்வு காரணமாக ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் தான் பயணிகளின் நலம் கருதி தான் ரயில் டிரைவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

மற்ற வேலைகள் செய்யும் ஊழியர்கள் போலவே ரயில் டிரைவர்களும் ஒரு நாளில் 8 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதுபோல தேவைக்கு ஏற்ப நேரம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் ஓட்டுநர்கள் 4 மணி நேர ஷிப்ட் மட்டுமே செய்வார்கள். அதே ஓட்டுநர் சில சமயங்களில் 9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கூட வேலை செய்யவார்கள். இந்த கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்படுகிறது.

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

why is ganesh idol immersed in water in tamil

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா கலர் கவர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Do you know why Indian trains are blue in colour in tamil

ஏன் இந்திய ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

Why Keep Water in The Pooja Room in Tamil

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்.? உங்களுக்கு தெரியுமா.?

The Reason Why Sambar Got its Name in Tamil

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா..? இது தெரியாம போச்சே..!

Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா..?

Why is The Auto Yellow in Tamil

ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா..?

Reason For Salivation On The Tongue After Seeing Sour Food in Tamil

புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன தெரியுமா..?