Which Fruit Should Not Be Taken On A Flight in Tamil
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் சிலருக்கு விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இப்படி இருக்கையில் நம்மில் பலரும் வானத்தில் விமானம் சென்றாலே அதை இன்றும் அவ்வளவு ஆச்சர்யமாக பார்க்கிறோம். ஆனால் விமானத்தில் நடக்கும் சில விஷயங்கள் நமக்கு தெரியாது. அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக விமானத்தில் எடுத்து செல்லக்கூடாத பழம் எது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
நாம் ஏன் இடது கையில் வாட்ச் கட்டுறோம்னு தெரியுமா.? இதுதான் காரணம்
விமானத்தில் இந்த பழங்களை ஏன் எடுத்து செல்ல கூடாது..?
பொதுவாக நாம் பேருந்து, ட்ரெயின் போன்றவற்றில் பயணம் செய்திருப்போம். அப்படி செல்லும் போது நமக்கு வேண்டியவைகளை நாம் எடுத்து செல்வோம். அதாவது உணவு பொருட்கள், பழங்கள் என்று நாம் எதை வேண்டுமானாலும் எடுத்து செல்வோம்.
ஆனால், விமானத்தில் இப்படி சில பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருட்கள் என்றும், அந்த பொருட்களை ஏன் எடுத்து செல்ல கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக நாம் விமானத்தில் ஏறும்போது நம்முடன் எடுத்துச் செல்ல கூடாத பொருட்கள் பல உள்ளன. அதாவது நாம் விமானத்தில் செல்லும் போது கூரிய ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை நாம் விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது. இந்த மாதிரியான பொருட்கள் எடுத்து செல்ல தடை விதித்துள்ளது.
ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை.. காரணம் தெரியுமா
ஆனால் ஒரு சில பழங்களையும் எடுத்து செல்லக்கூடாது என்று விதியும் உள்ளது. உடனே நம் அனைவருக்கும் பழங்களை எடுத்து செல்வதால், என்ன ஆகிவிட போகிறது என்று யோசிப்போம்.
ஆனால் பழங்களை எடுத்து செல்வதாலும் விமானத்தில் தீவிபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அது என்ன பலன் என்று யோசிக்கிறீர்களா..? அதை பற்றி தற்போது காண்போம்.
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தேங்காயை விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் தேங்காய்களில் அதிக அளவு எண்ணெய் உள்ளடக்கம் இருக்கிறது. ஆகவே இது எளிதில் தீ பற்றக்கூடிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.அதேபோல விமானத்தில் மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற வாசனை நிறைந்த பழங்களை எடுத்து செல்லக்கூடாது. ஏனென்றால், மாம்பழம் மற்றும் பலாப்பழம் கடுமையான வாசனை உள்ள பழமாகும். மேலும் இது பூச்சிகளை அதிகம் ஈர்க்கிறது. அதனால் விமானத்தில் மேல்நிலை லாக்கரில் புழுங்கி, கேபினில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |