சேமிப்பு எப்படி உருவானது..? சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியவர் யார் தெரியுமா..?

Advertisement

சேமிப்பு உருவான விதம் 

நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே தினமும் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றோம். காரணம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான். பணம் இருந்தால் தான் நம்மால் இந்த உலகில் வாழவே முடியும். சிலர் உணவும், நீரும், காற்றும் இருந்தாலே போதும் இந்த உலகில் வாழலாம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த உணவையும் நீரையும் நாம் இன்றைய நிலையில் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். சரி பொதுவாக நம் அனைவருக்குமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா..! அப்படி சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களுக்கு தெரியபடுத்தியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை இந்த பதிவின் மூலம் படித்தறியலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சேமிப்பு எப்படி உருவானது..? 

சேமிப்பு எப்படி உருவானது

பொதுவாக சேமிப்பு என்பது முதன் முதலில் 1700 -களின் பிற்பகுதியில் சுவிஸ் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். மேலும் 1800 -களில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து வழியாக இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

1694 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டபோது தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைப்பதற்காக முதன் முதலில் வட்டி செலுத்தப்பட்டதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. 

சில வரலாற்று ஆசிரியர்கள், சேமிப்பு இயக்கத்தின் தோற்றம் 1834 ஆம் ஆண்டு கல்கத்தா அரசாங்கத்தால் நிறுவப்பட்டது என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், அரசாங்க சேமிப்பு வங்கி சட்டம் 1873 இல் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1882 இல் இந்திய அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி நடைமுறைக்கு வந்தது.

பணத்தை சேமிப்பது நல்லதா.. முதலீடு செய்வது நல்லதா

இப்படி தான் சேமிப்பு கொண்டு வரப்பட்டது. அதுபோல நாம் எந்தவொரு சூழலிலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.

நாம் உழைக்கும் காலத்தில் சேமித்தால் தான் ஓய்வு பெறும் காலத்தில் அந்த பணம் நமக்கு உதவியாக இருக்கும். அதனால் நாம் நம் நாட்டில் எத்தனையோ சேமிப்பு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 சேமிப்பு திட்டங்கள் 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking
Advertisement