Who Invented School First in Tamil | கல்வியை கண்டுபிடித்தவர் யார்
இன்றைய பதிவை படித்து முடிக்கும் பொழுது ஒரு சுவாரசியமான மற்றும் அருமையான தகவலை அறிந்து கொண்ட மனமகிழ்ச்சி கிடைக்கும். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நீங்கள் தினமும் கஷ்டப்பட்டு மற்றும் வருத்தப்பட்டு கொண்டே செல்லும் பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர் யார் என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் பள்ளிக்கூடத்தில் சென்று கல்வி பயிலும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் என்று அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Homework-ஐ கண்டுபிடித்தவர் இவர்தனா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
School-ஐ கண்டுபிடித்தவர் யார்..? | பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்தவர் யார்.?
பொதுவாக கல்வி பயில செல்லும் குழந்தைகளுக்கு பள்ளி கூடத்திற்கு செல்வதில் அவ்வளவாக இஷ்டம் இருக்காது. அவர்களை பள்ளிக்கூடத்திற்கு தயார்படுத்த அவர்களின் பெற்றோர்கள் படாதபாடுபடுவார்கள்.
அப்படி கஷ்டப்பட்டுக்கொண்டே பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு குழந்தையின் மனதிலேயும் எழும் ஒரே பொதுவான கேள்வி என்றால் யாரு தான் இந்த பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்தங்களோ என்பது தான்.
ஏன் நீங்களும் சிறு வயதில் இந்த கேள்வியை கேட்டிருப்பீர்கள். அப்பொழுது உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருக்காது. ஆனால் உங்கள் மனதில் உள்ள கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Exam கண்டுபிடித்தவர் யாருனு உங்களுக்கு தெரியுமா இதோ இவர் தான் அது
முதன் முதலில் பள்ளிக் கல்வி முறையை உருவாக்கியவர் ஹோரேஸ் மான் (Horace Mann) ஆவார். இவர் 1796 இல் பிறந்தார். பின்னர் இவர் மாசசூசெட்ஸில் கல்வி செயலாளராக பணியாற்றினார்.சமூகத்தில் கல்வி சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்தார். மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றும் பொதுக் கல்வியானது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கல்வியை வழங்குவது அவசியம் என்று அவர் நம்பினார்.
அதனால் இவர் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் முறையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. மேலும் இவரை ‘நவீன கல்வியின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆனால் ஒரு சிலர் ரோமானியர்கள் தான் முதன் முதலில் பள்ளி கல்வி முறையை உருவாக்கினார்கள் என்று கூறுகிறார்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |