பச்சை மிளகாய் நறுக்கினால் கைகள் ஏன் எரிகிறது.?

Advertisement

Why Are My Hands Burning After Cutting Chillies

பச்சை மிளகாயை பல நபர்கள் பச்சையாகவே சாப்பிடுவார்கள். பச்சை மிளகாயை சாப்பிட்டால் காரமாக இருக்கும், ஆனால் அதை நறுக்கும் போது அல்லது அரைக்கும் போதோ கைகள் எரியும். சில நபர்கள் பச்சை மிளகாய் நறுக்கிய பிறகு உடம்பில் வேறு எங்கையும் கையை வைக்காமல் கழுவி விட்டு தான் மறுவேளை பார்ப்பார்கள். ஏன் தான் இப்படி பச்சை மிளகாயை கை வைத்தாலே எரிகிறது என்று நினைப்பீர்கள். அதனால் இந்த பதிவில் பச்சை மிளகாயை கட் செய்தாலோ அல்லது அரைத்தலோ ஏன் எரிகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

பச்சை மிளகாயை கட் செய்தால் ஏன் கைகள் எரிகின்றது.?

why are my hands burning after cutting chillies in tamil

பச்சை மிளகாயை சாப்பிடும் போது எரிவது இயல்பானது. அதுவே பச்சை மிளகாயை நறுக்கும் போதோ அல்லது அரைக்கும் போது எரிவதற்கு என்ன காரணம் என்று யோசித்து கொண்டிருப்பவரா இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காயம் வெட்டும் போது ஏன் கண்ணில் நீர் வருகிறது..? காரணம் தெரியுமா..?

 மிளகாவில் உள்ள கேப்சைசினால் தான்  கைகள் எரிகின்றது. கேப்சைசின் உங்கள் தோல்களில் இணைகிறது. இது அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் உணர்வைப் போன்ற ஒரு நரம்பு மண்டலத்தின் எதிர்வினையை உருவாக்குகிறது. இதன் காரணமாக தான்  எரியும் உணர்வு ஏற்படுகிறது.  

கை எரிச்சலை குறைக்க என்ன செய்ய வேண்டும்:

  • கைகளில் பால் அல்லது தயிர் அப்ளை செய்ய வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யலாம்.
  • கைகளில் சிறிது உப்பு தைத்தால் எரிச்சல் குறைந்து விடும்.
  • கைங்களை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

மிளகாய் நறுக்கிய பிறகு எரிந்தால் அதனை நீக்குவதற்கு தேங்கய் எண்ணெயை கை முவதும் தடவி 30 நிமிடம் கழித்து சோப்பை போட்டு கழுவி விடவும். இதனால் கை எரிச்சல் சரியாகிவிடும்.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement