ஏன் அனைத்து கோள்களும் வட்டமாக உள்ளது என்று தெரியுமா..?

Advertisement

Why Are Planets Round in Shape 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியினை பள்ளி படிக்கு காலத்தில் இருந்து புத்தகத்தில் பார்த்து இருப்போம். அதன் பின்பு ஒவ்வொரு கோள்கள், நட்சித்திரங்கள், பூமி மற்றும் சூரியன் என இவற்றை எல்லாம் பற்றி படித்து இருப்போம். ஆனால் இதனை நாம் நிறைய படித்து அதனை பற்றி கற்று கொண்டிருப்போம். சில வருடங்கள் களித்து அவற்றை எல்லாம் நியாபகம் இருக்குமா என்று கேட்டால் கொஞ்சம் கடினம் தான். என்ன தான் இவற்றை எல்லாம் பற்றி சிறய வயதில் இருந்து படித்தாலும் கூட இதில் நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு எளிமையான கேள்வி ஒன்று உள்ளது. அது என்னவென்றால் அனைத்து கோள்களும் ஒரே மாதிரி வட்டமாக தான் இருக்கும். இதனை நீங்கள் சிந்தித்தது உண்டா..! அப்படி சிந்தித்து இருந்தால் அதற்கான பதில் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் அனைத்து கோள்களும் வட்டமாக உள்ளன:

நாம் படிக்கும் அனைத்து படிப்புகளிலும் இல்லாத சுவாரஸ்யம் ஆனது அறிவியல் படிப்பில் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் உள்ள ஒவ்வொரு படமும் ஒன்றுடன் ஒன்று சில வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.

அதோடு மட்டும் இல்லாமல் இவற்றை நம்மை படிக்க படிக்க நம்முடைய அறிவு மற்றும் சிந்திக்கும் திறன் ஆனது அதிகரித்து கொண்டே தான் போகும்.

அவ்வாறு இருக்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் எண்ணற்ற விஷயங்கள் இதுமாதிரி இருக்கிறது. அதில் ஒன்றாக ஏன் அனைத்து கோள்களும் வட்டமாக இருக்கிறது என்று என்றால்..?

ஏனென்றால் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக தான் அனைத்து கோள்களும் வட்டமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது ஈர்ப்பு விசை ஆனது சூரிய குடும்பம் தோன்றும் போதே பெரிய அளவிலான பில்லியன் கணக்கில் ஆன வாயுக்களையும், தூசிகளையும் சேகரித்து விடுகிறது.

அதன் பின்பு இந்த வாயு மற்றும் தூசி இவை எல்லாம் இணைந்து உருகியும், சூடானதாக மாறியும் தான் கிரங்கள் பெரிய அளவிலான கிரங்கள் உருவாகிறது. இதன் பின்பு புவி ஈர்ப்பு விசையானது கிரகத்தின் மையத்தினை உள்நோக்கி இழுக்கிறது. கடைசியாக கிரங்கள் குளிர்ந்த பின்பு தான் கோள வடிவினை பெறுகிறது. இதுவே கிரங்கள் கோள வடிவத்தில் இருப்பதற்கான காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்👇👇 சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா..  அப்போ அதற்கு காரணம் இது தான்.. 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement