Why Ayyappa Legs are Tied in Tamil | Why Ayyappa Sitting Position in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்பன் சுவாமியின் கால்கள் கட்டப்பட்டு இருப்பதற்கான காரணத்தை கொடுத்துள்ளோம். ஐயப்பன் அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர் ஆவர். ஐயப்பன் அவர்கள் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் ஆகியோரின் மகனாகவும், அன்னை பார்வதி தேவியின் வளர்ப்பு மகனும் ஆவார். ஐயப்பன் சுவாமி ஒரு கையில் அம்பையும், மற்றொரு கையில் வில்லை ஏந்தியபடியும் புலியின் அருகில் அல்லது புலியின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார்.
அதுவே, சபரிமலையில் தனது இரு கால்களையும் மடக்கி வைத்தவாறு எழுந்திருக்கும் நிலையில் அமர்ந்து இருப்பார். அவர் கால்கள் கட்டப்பட்டு இருப்பது போல் இருக்கும். நீங்கள் என்றாவது ஏன் ஐயப்பன் கால்கள் கட்டப்பட்டு இருக்கிறது என்று யோசித்து இருக்கிறார்கள். அப்படி யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஐயப்பனின் கால்கள் ஏன் கட்டப்பட்டிருக்கிறது.?
ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்க போனதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறு கூறி, சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார் என்று கூறப்படுகிறது.
ஐயப்பன் சுவாமியின் கால்கள் கட்டப்பட்டிருப்பது இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. ஐயப்பனின் கால்களில் துண்டு கட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்து இருப்போம். இதற்கான காரணத்தை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
காரணம் -1
ஐயப்பன் சுவாமியின் தந்தையான பந்தள மகாரஜா கேட்டதால், ஐயப்பன், சபரிமலையில் அம்பு விட்டு அங்கு எனக்கு 18 படி அமைத்து எனக்கு ஒரு கோவில் கட்டுங்கள் என்று கூறினார். எனக்காக விரதம் இருந்து, என்னை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தினை நான் அளிப்பேன் என்று கூறினார். அதேபோல்,சபரிமலையில் கோவில் அமைத்து ஐயப்பன் சபரிமலையில் தவக்கோலத்தில் அமர்ந்து இருப்பார்.
ஒருமுறை, அவரது வளர்ப்பு தந்தையான பந்தள மகாரஜா ஐயப்பனை தரிசிக்க வந்த போது, தந்தை என்ற காரணத்தால் எழ முயன்றார் ஐயப்பன். அப்போது, இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி பந்தள மகாரஜா தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. உட்கார்ந்த நிலையில் மேலே சற்று எழுந்தபோது, எழுந்திருக்கக்கூடாது என்று தடுத்ததால் ஐயப்பன் சுவாமி இதுபோன்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.
ஐயப்ப பக்தர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டும் ஆடை அணிகிறார்கள் தெரியுமா.? இதுதான் காரணம்.!
காரணம் -2
ஐயப்பனின் கால்களில் இருப்பது கட்டு அல்ல. அது யோகப் பட்டம். அவர் யோக நிலையில் இருப்பதால் அது யோக பட்டம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதிரியான யோகப் பட்டத்தை, யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் இருக்கும் தெய்வ மூர்த்தங்களிலும் இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன. ஐயப்பன் வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோவில், ஆரியங்காவு ஆலயங்களில் இருப்பார். இருந்தாலும், சபரி மலையில், யோக நிலையில் அமர்ந்து இருப்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பிரபலம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
அது மகா யோகபீடம். பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதன் காரணமாகவே ஐயப்பன் காலில் யோகப்பட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையை தான் `ஹரிவராசனம்’ என்று கூறுவார்கள். அதாவது, இரண்டு கால்களும், பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த நிலையில், உடலை நிறுத்துவதற்கு யோகப்பட்டம் பயன்படுகிறது.
சபரிமலையை தவிர மற்ற கோவில்களில், ஐயப்பனை வீராசனத்தில் காணலாம். அதன்படி பார்த்தால், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.
எனவே, ஐயப்பன் சுவாமி சபரிமலையில் இருகால்களும் கட்ட்டப்பட்டு (யோகப்பட்டம்) யோகநிலையில், மற்ற கோவில்களில் வீராசனத்திலும் காட்சிளிக்கிறார். இதுவே, ஐயப்பனின் கால்கள் கட்டப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |