கைதிகளை ஏன் சூரியன் உதிப்பதற்கு முன் தூக்கில் இடுகிறார்கள் என்று தெரியுமா..?

Advertisement

Why Criminals Hanged Before Sunrise in Tamil

பொதுவாக சிறையில் உள்ள மரண தண்டனை கைதிகள் சூரியன் உதிப்பதற்கு முன்னரே தூக்கிலிடப்படுவார்கள் என்று நாம் பிறர் கூற கேட்டிருப்போம் அல்லது திரைப்படங்களில் பார்த்து இருப்போம். ஏன் அப்படி சூரிய உதயத்திற்கு முன் தூக்கிலிடுகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி யோசித்து இருக்கும் நபர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் நண்பர்களே கைதிகளுக்கு மரணதண்டனை ஏன் சூரிய உதயத்திற்கு முன் கிடைக்கிறது என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்

குற்றவாளியை சூரியன் உதிப்பதற்கு முன் தூக்கிலிடுவதற்கான காரணங்கள்:

 சிறைச்சாலை கையேட்டின் படி, சிறையில் உள்ள அனைத்து வேலைகளும் சூரியன் உதிப்பதற்கு பிறகு தான் செய்யப்படுகின்றன.   எனவே குற்றவாளியை அதிகாலையில் தூக்கிலிட்டால் தான் சிறைச்சாலையின் வேலைகள் பாதிக்கப்படாது. இதற்காக தான் குற்றவாளியை அதிகாலையில் தூக்கிலிடுகிறார்கள்.   மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தூக்கிலிடப்பட உள்ள  ஒரு நாளில் நீண்ட நேரம் காத்திருக்க கூடாது என்பதற்காகவும், அதேசமயம் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காகவும் அதிகாலையில் தூக்கிலிடப்படுகிறார்கள். 

அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான மக்கள் தூங்கி கொண்டிருப்பதால் சமூகத்தில் ஏற்படும் தீடிர் எதிர்வினைகளை தடுக்கும் பொருட்டு அதிகாலையில் தூக்கிலிடப்படுகிறது.

குற்றவாளியின் ஆசை:

குற்றவாளிகள் தூக்கிலிடுவதற்கு முன்பு, சிறை நிர்வாகம் குற்றவாளியின் கடைசி ஆசை என்னவென்று குற்றவாளியிடம் கேட்கிறது. அப்படி அவர்கள் கூறிய கடைசி ஆசை, சிறையின் கையேட்டின் படி இருந்தால் மட்டுமே குற்றவாளியின் ஆசையை நிறைவேற்றுவார்கள்.

அப்படி இல்லாமல் சிறையின் கையேட்டிற்கு ஏற்றவாறு இல்லாமல் இருந்தால் குற்றவாளியின் ஆசை நிறைவேற்றபடமாட்டாது.

குண்டர் சட்டம் என்றால் என்ன? குற்றத்தன்மை முதல் தண்டனை வரை..

குற்றவாளியிடம் மன்னிப்பு:

மரணதண்டனையை நிறைவேற்றும் நபர், குற்றவாளியின் காதில் மன்னிப்பு கேட்பாராம். தூக்கிலிடும் மேடையில் இணைக்கப்பட்ட நெம்புக்கோலை இழுப்பதற்கு முன் ” என்னை மன்னியுங்கள்” என்று குற்றவாளியிடம் கூறுவாராம்.

தூக்கிலிடும் நேரம்:

குற்றவாளியை அதிகாலையில் 10 நிமிடங்கள் தூக்கிலிட அனுமதிக்கப்படுகிறது. தூக்கிலிடப்பட்ட பின் மருத்துவர் குழு வந்து ஆய்வு செய்து அவர் இறந்து விட்டார் என்று கூறிய பிறகே குற்றவாளி தூக்கிலிருந்து கீழே இறக்கப்படுகிறார்.

மரண தண்டனை நேரத்தில் மரணதண்டனை நிறைவேற்றும் நபர், மருத்துவர், மாஜிஸ்திரேட், சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் இல்லையெனில் குற்றவாளியை தூக்கிலிட முடியாது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement