வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஐயப்ப பக்தர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டும் ஆடை அணிகிறார்கள் தெரியுமா.? இதுதான் காரணம்.!

Updated On: December 3, 2024 3:42 PM
Follow Us:
Why Ayyappa Devotees Wear Black Dress in Tamil 
---Advertisement---
Advertisement

Why Ayyappa Devotees Wear Black Dress in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்ப பக்தர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டும் ஆடை அணிகிறார்கள் என்பதற்கான விவரங்களை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. கார்த்திகை மாதம் வந்து விட்டாலே நம் அனைவரது நினைவிற்கு வருவது ஐயப்பன் சுவாமி தான். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் கடுமையான விரதம் இருந்து, அதன் பிறகு ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வார்கள்.

அவர்கள் மாலை அணிந்து இருக்கும் 48 நாட்களும் சுத்தமாக இருந்து, காலை மாலை என இரு வேலையும் குளிந்த நீரில் குளித்து கருப்பு நிற ஆடைகளை அணிந்து இருப்பார்கள். விரதம் இருக்கும் போது ஏன் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே ஆடை அணிந்து இருக்கிறார்கள் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் ஆடை அணிவதன் காரணம்:

ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் ஆடை அணிவதன் காரணம்

ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் ஆடை அணிவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று அறிவியல் காரணம் மற்றொன்று புராண கதை.

அறிவியல் காரணம்:

கருப்பு நிற ஆடை வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டது ஆகும். ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் காலம் குளிர்காலம் என்பதால், கருப்பு நிற ஆடை அணிந்தால் அதிகப்படியான குளிரை கருப்பு நிற ஆடை தாங்கிக்கொள்ளும் என்பதற்காக கருப்பு நிறத்தில் ஆடை அணிகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், சபரிமலையில் காட்டு யானைகள் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் மற்றும் பிற நிறங்களை கண்டால் சினம் கொண்டு பிளிறும். ஆனால், கருப்பு நிற ஆடையை கண்டால் வெகுண்டு எழாது. அதனால் தான் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து சபரிமலைக்கு செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஐயப்பன் மாலை போடும் விதிமுறைகள்..!

புராண கதை:

  • சாஸ்தா ஐயப்பன் சுவாமி, சனீஸ்வர பகவானுக்கு செய்து கொடுத்த சத்தியம் தான் ஐயப்ப பக்தர்கள், கருப்பு நிறத்தில் மட்டுமே ஆடை அணிவதற்கு காரணம் . சனீஸ்வர பகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு நிறம் ஆகும். அதனால் தான் சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தனது பக்தர்களை காத்தருள, பக்தர்களுக்கு கருப்பு நிற ஆடை அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
  • ஒரு முறை சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரை பிடிக்க சென்ற போது, ஐயப்ப சுவாமி சனீஸ்வர பகவானை தடுத்து நிறுத்தி என்னுடைய பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, சனீஸ்வர பகவான, எனக்கு ஏழை, பணக்காரர், கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. ஏழரை சனியின் காலம் வரும்போது அவரை பாரபட்சம் இல்லாமல் பிடிப்பேன். அதுதான் என்னுடைய தர்மம் என்றார்.
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும், அவர்களின் வேலையான படைத்தல், காத்தல், அளித்தல் வேலையை எப்படி சரியாக செய்கிறார்களோ அதே போல் என்னுடைய வேலையை உரிய நேரத்தில் சரியாக செய்கிறேன் என்றார்.
  • படைத்தல், அளித்தல், அழித்தல் தொழில் தடைபட்டால் எப்படி படைப்பு தொழிலான சிருஷ்டி நடக்காதோ, அதுபோலவே, மனிதர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை உரிய நேரத்தில் தண்டிக்கிறேன். அந்த வேலையை நான் ஒழுங்காக செய்யாவிட்டால் தர்மம் எப்படி வாழும் என்று சனீஸ்வர பகவான் கேட்டார்.
  • அதற்கு, ஐயப்ப சுவாமி, சரி இனிமேல் நீ தரும் தண்டனைகளை என்னிடம் சொல், அந்த தண்டனைகளை ஒரு மண்டல காலத்திலேயே அனுபவிக்குமாறு, என்னுடைய பக்தர்களுக்கு, விரத முறையாக நான் வகுத்து கொடுக்கிறேன் என்று கூறினார்.
  • அதற்கு, சனீஸ்வர பகவான், ஒருவருக்கு ஏழரை சனி காலம் வந்துவிட்டால், அக்காலத்தில், அவர்களை விதவிதமான உணவுகளையும் பழங்களையும் உண்டு மகிழ்ந்தவரை சோற்றுக்கே வழியில்லாமல் அலைய வைப்பேன். கட்டிலில் ஆடம்பரமாக தூங்கியவரை படுப்பதற்கே வழி இல்லாமல், கட்டாந்தரையிலும், பாறையிலும் உறங்க வைப்பேன். அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் கூட, அவர்களை என்னுடைய பார்வையால் பிரித்து விடுவேன். உடுத்திக்கொள்ள ஒழுங்கான உடை இல்லாமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், அழகு குன்றி உடலில் சக்தியின்றி வாடிப் போக வைப்பேன். எல்லா காலத்திலும் பன்னீரிலேயே குளித்து திளைத்தவர்களை தண்ணீருக்கே வழியில்லாமல் அலைய வைப்பேன். இப்படி பல விதமான முறையில் நான் அவர்களை தண்டிப்பேன். இதை அனைத்தையும் நீங்கள் எப்படி ஒரு மண்டலத்திலேயே தண்டனையாக கொடுக்க முடியும் என்று கேட்டார் சனீஸ்வர பகவான்.
  • அதற்கு, ஐயப்பன் சுவாமி கவலைப் படாதீர்கள். நீங்கள் கூறியுள்ள  அத்தனை தண்டனைகளையும் என் பக்தர்களுக்கு நான் அளிப்பேன்.
  • என்னுடைய பக்தர்கள் ஒரு மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு, ஆடம்பரமான கட்டிலில் உறங்காமல், வெறும் தரையிலேயே படுத்துறங்குவார்கள். தாம்பத்யத்தில் அறவே ஈடுபடாமல், கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து, ஒரு மண்டல காலத்தில் எப்போதும் என்னுடைய நாமமான சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லியே, காடு, மலைகளை கடந்து என்னை வந்து தரிசிப்பார்கள் என்று கூறினார்.
  • அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு பிடித்த கருப்பு நிற ஆடைகளையே உடுத்து செய்து, காலணிகளை அணிய விடாமல், முடி திருத்திக்கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மணி மாலையை அணிந்து கொண்டு, சுக துக்கங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்று அழைக்க செய்வேன்.
  • காலை, மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரிலேயே என் பக்தர்களை நீராட செய்வேன். என் பக்தர்கள் அனைவருமே இந்த விரத முறைகளை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்து முடித்து என்னை வந்து தரிசிப்பார்கள். அவர்களின் மேல், நீ உன்னுடைய கொடூர பார்வையை செலுத்தாமல் மனம் கனிந்து கருணை மழை பொழிந்து அருளாசி வழங்கி வரவேண்டும் என்று கேட்டார் ஐய்யப்பன்.
  • தர்மாசாஸ்தா ஐயப்பன் சுவாமி சொன்ன கேட்ட சனீஸ்வர பகவான், அன்றிலிருந்து இன்றுவரையிலும், ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய கொடூர பார்வையை செலுத்தாமல் நன்மையை மட்டுமே அளித்து வருகிறார் சனீஸ்வர பகவான்.
  • எனவே, சனீஸ்வர பகவானின் கொடூர பார்வையிலிருந்து தன்னுடைய பக்தர்களை காப்பதற்காகவே, சனீஸ்வர பகவான் சொன்ன தண்டனைகளை கடுமையான விரத முறைகளாக தன் பக்தர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளார் ஐயப்பன் சுவாமி.

சுவாமியே சரணம் ஐயப்பா..! 

ஐயப்பனின் 1008 பெயர்கள்.!

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் ->  Thinking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Why Not to Eat Non Veg in Purattasi in Tamil 

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா.?

why is ganesh idol immersed in water in tamil

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா கலர் கவர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Do you know why Indian trains are blue in colour in tamil

ஏன் இந்திய ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

Why Keep Water in The Pooja Room in Tamil

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்.? உங்களுக்கு தெரியுமா.?

The Reason Why Sambar Got its Name in Tamil

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா..? இது தெரியாம போச்சே..!

Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா..?

Why is The Auto Yellow in Tamil

ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா..?