கும்பாபிஷேகத்தின் போது பருந்து ஏன் பறக்கிறது தெரியுமா.? இதுதான் காரணம்..!

Advertisement

Why Do Fly Hawk During Kumbabishekam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கும்பாபிஷேகத்தின் போது பருந்து ஏன்.? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. நாம் அனைவருமே பல்வேறு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருப்போம். கும்பாபிஷேகத்தின் போது கோவில் கோபுரத்தின் உச்சியில் பருந்து பறந்தால் தான் கோபுரத்தின் கலசத்தில் தண்ணீர் ஊற்றுவார்கள். இதனை நாம் அனைவருமே அறிந்த ஒன்றே. ஆனால், ஏன் கும்பாபிஷேகத்தின் போது பருந்து கோபுரத்தின் மேல் பறந்தால் தான் கலசத்தில் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் கும்பாபிஷேகத்தின் போது பருந்து பார்ப்பதற்கான காரணம் என்ன என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பாபிஷேகம் பார்த்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

கும்பாபிஷேகத்தின் போது பருந்து பறப்பது ஏன்.?

கும்பாபிஷேகத்தின் போது பருந்து பறப்பது ஏன்

கருடன் திருமாலின் வாகனமாகவும் அம்சமாகவும் இருப்பவர். காசிபர் வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரிய சுமையை சுமப்பவன் என்று என்று அர்த்தம்.

 கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். குடமுழக்கின்போது யாகம் வளர்ப்பார்கள். இது வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் சடங்கு ஆகும். அப்படி கும்பாபிஷேகத்தில் முறையாக வேத மந்திரங்களை ஓதி இருந்தால் அந்த இடத்தில கருடன் வட்டமாக வலம் வருவார்.  கருட தரிசனம் பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். ஆகவே, கருடன் கோவில் கோபுரத்தை வட்டமிட்ட பிறகே கோபுரத்தின் கலசத்தில் தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் முழுமை அடையும்.  

நம் நாட்டில் எந்த ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த இடத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்று பார்ப்பார்கள். அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால் யாகம் ஓதியதில் ஏதாவது குறைபாடு இருக்கிறது என்று அர்த்தமாம். அதனால் கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது.

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. மேலும், பருந்து என்பதை ‘கிருஷ்ண பருந்து’ செம்பருந்து என்றும் கூறுவார்கள். கருடனை வணங்கும்போது ‘தத்புருஷாய வித்மஹே ஸுபர்ண பஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்’ இந்த மந்திரத்தை கூறி வணங்க வேண்டும். எவர் ஒருவர் இம்மந்திரத்தை தொடர்ந்து 6 மாதங்கள் உச்சரித்து வருகிறாரோ அவருக்கு கருடர், தன் சக்தியின் ஒரு துளியை தருகிறார் என்பது நம்பிக்கை.

சாப்பிடும் போது கையை தரையில் வைத்து சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள Pothunalam.com தளத்தை பார்வையிடவும். 

Advertisement