Why Do Some Planes Leave a White Trail in Tamil
நாம் அனைவருமே விமானம் போகின்ற சத்தம் கேட்டால் போதும் உடனே மேலே பார்ப்போம். விமானம் பறப்பதை வியப்பாக பார்த்து கொண்டே இருப்போம். அதிலும் அவை பின்னால் வெள்ளை நிறத்தில் கோடுகளும் தெரியும். அந்த கோடுகள் எதற்காக தெரிகிறது என்று பலபேர் யோசித்து இருப்போம். அப்படி யோசித்து இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமானம் பறக்கும் போது அவற்றின் பின்னால் வெள்ளை நிற புகையை வெளியிடுகிறது. இதனை நாம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமக்கு வெள்ளை கோடுகள் போன்று தெரிகிறது. விமானம் இந்த வெள்ளை நிற புகையை வெளியிட்டு கொண்டே செல்வதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு. எனவே அவற்றை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Why Does a Plane Leave a White Trail in The Sky in Tamil:
வானத்தில் விமானம் பறந்து செல்லும்போது அல்லது பறந்து சென்ற இடத்தில் வெள்ளைநிற நீண்ட கோடுகள் தோன்றும். பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வானத்தில் வெள்ளை நிற கோடுகளை பார்த்தால் கூர்ந்து பார்த்து கொண்டே இருப்போம்.
ஏன் அப்படி கோடுகள் தெரிகிறது என்று கேட்டால், அது வானத்தில் சென்ற ஜெட் விமானங்களின் புகை என்று கூறுவார்கள். ஆனால் அந்த வெள்ளை நிற கோடுகளுக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.
இந்த வெள்ளை நிற கோடுகளை உயரத்தில் பறக்கும் விமானங்களில் மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால் உயரமான இடங்களில் உள்ள காற்றின் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக காணப்படும். சில நேரங்களில் வெப்பநிலை -40 டிகிரி வரை குறையும். கார் போன்ற வாகனங்களின் எஞ்சினில் இருந்து புகை வெளியேறுவதை போல் விமானத்தில் உள்ள எஞ்சினும் வெப்பமான காற்றை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பமான காற்றில் உள்ள நீராவி மிகவும் குளிர்ச்சியான காற்று மண்டலத்துடன் சேரும் போது சிறிய நீர்த்துளிகள் அல்லது சிறிய பனிக்கட்டிகளாக மாறுகிறது. உதாரணமாக நாம் மிகவும் குளிர்ச்சியான நாட்களில் சுவாசிக்கும் போது நம் சுவாச காற்று புகைப்போல் தெரிகிறதோ அதேபோல் விமானத்தின் வெப்பமான காற்று சிறிய நீர்த்துளிகள் அல்லது பனிக்கட்டிகளாக மாறி வானத்தில் நீண்ட வெள்ளை நிற கோடுகளாக தோன்றுகிறது. இந்த வெள்ளை நிற கோடுகளை நீராவி பாதை என்றும் அழைக்கின்றனர்.விமானம் மேல் செல்லும் போது டார்ச் அடித்தால் பைலட்டுக்கு கண் கூசுமாம்..! இது யாருக்கு தெரியும்..? |
இக்கோடுகளை வைத்து வானிலை கணிப்பது எப்படி..?
இந்த கோடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக காட்சியளிப்பதில்லை. சில கோடுகள் வானத்தில் பல மைல் தூரம் வரை தெரிகிறது. ஆனால் ஒரு சில கோடுகள் சிறிய அளவில் மட்டுமே தெரிகிறது.
நீண்ட வெள்ளை நிற கோடுகள் அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் மட்டுமே தோன்றும். ஆனால் சிறிய கோடுகள் குறைந்த ஈரப்பதம் உள்ள இடத்தில் மட்டுமே தோன்றும். நீண்ட வெள்ளை கோடுகள் மழை வரும் அறிகுறியையும், சிறிய வெள்ளை நிற கோடுகள் வறண்ட வானிலையையும் குறிக்கிறது.
எனவே, விமானங்கள் பறக்கும் தூரம், வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதம் ஆகியவற்றை பொறுத்து தான் வெள்ளைநிற கோடுகளின் அடர்த்தி மாறுபடுகிறது. இதுவே வானத்தில் வெள்ளை நிற கோடுகள் தோன்றுவதற்கான காரணங்கள் ஆகும்.
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |