Why Do We Yawn When We See Others Yawning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அடுத்தவர்கள் கொட்டாவி விட்டால் நமக்கு கொட்டாவி வருவதற்கான காரணங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்முடன் பேசி கொண்டிருக்கும் நபரோ அல்லது அருகில் உள்ள நபரோ அல்லது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நபரோ கொட்டாவி விட்டால், நாமும் கொட்டாவி விடுவோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஏன் இப்படி ஆகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நம்மில் பலரும், பிறர் கொட்டாவி விட்டால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது என்று யோசித்து இருப்போம். ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம். ஆனால், பலருக்கும் இதற்கான பதில் தெரியாமலே இருக்கும். ஆகையால், Why Do We Yawn When We See Other Person Yawning in Tamil பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?
Why Do We Yawn When We See Other Person Yawning in Tamil | பிறர் விடும் கொட்டாவி ஏன் நமக்கு வருகிறது.?

ஆனால், அனைவருக்கும் இந்த மிரர் நியூரான்கள் செயல்படுவதில்லை. மன இறுக்கம் அல்லது ஸ்கிசோஃப்ரினியா போன்ற நரம்பியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லாம், பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தால்அவர்களுக்கு கொட்டாவி வராது. அதற்கு பதிலாக அவர்களுக்கு வேறு விதமான தூண்டுதல்கள் இருக்கும்.
இதனை Empathy (அனுதாபம்) என்று கூறுவார்கள். அதாவது, வேறொருவரின் அனுபவத்தை உணரும் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் ஆகும்.
இதற்கு எடுத்துக்காட்டாக பல விஷயங்களை கூறலாம். ஒருவர் அதிகமாக/அடிக்கடி ஒரு வார்த்தையை கூறுகிறார் எனில் அந்த வார்த்தையை நீங்களும் உங்களை அறியாமலே பயன்படுத்துவீர்கள். அதுமட்டுமில்லாமல், ஒருவர் நம்மை பார்த்து சிரித்தாள் நாமும் அவர்களை பார்த்து சிரிப்போம். பிறர் தண்ணீர் அருந்தினால், நமக்கு தாகம் இல்லையென்றாலும் நாமும் தண்ணீர் குடிப்போம். பிறர் கண் சிமிட்டினால் நாமும் கண் சிமிட்டுவோம். இதுபோன்று நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் அதிகம்.
சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்..! அப்படி கொட்டாவி வந்தால் கெட்ட ஆவியா..!
பிறர் கொட்டாவி விட்டால் நமக்கும் கொட்டாவி வரும் பழக்கம் பெரும்பாலும், நெருங்கிய நபர்களிடம் மட்டுமே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள்/அதிகம் பழகியவர்கள் கொட்டாவி விட்டால் நாமும் உடனே விடும். அதுவே, அந்நியர்கள் என்றால் கொட்டாவி அவ்வளவு எளிதில் அனைவருக்கும் வராது.கொட்டாவி மட்டுமே நாம் ஒருவரிடமிருந்து அப்படியே பார்த்து செய்யும் செயல் கிடையாது. நம்மை அறியாமலே தினமும் ஒருவர் செய்யும் விஷயத்தை, ஒருவர் கடைப்பிடிக்கும் பழக்கத்தை நாமும் பின்பற்றி கொண்டு தான் இருக்கிறோம். அதனை வார்த்தைகள் மூலமாகவோ அல்லது செயல்கள் மூலமாகவோ வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.
| மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் -> | Thinking |














